ஆவணக் கொலை தொடர்பாக நடிகர் ரஞ்சித் மீது வி.சி.க. சார்பில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே நடிகர் ரஞ்சித்தின் கவுண்டபாளையம் படம் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்திருக்கும் படம் ‘குழந்தை C/O கவுண்டம் பாளையம்’. நாடக காதலை மையமாக வைத்து இந்த படத்தை நடிகர் ரஞ்சித் எடுத்து இருக்கிறார். இந்த படத்தினுடைய ட்ரைலர் வெளியாகியதிலிருந்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=ir9B-p9W78Q
குறிப்பாக, அதோடு நடிகர் ரஞ்சித் அவர்கள் மறைமுகமாக வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களை தாக்கி பேசியிருக்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது. மேலும், பல சர்ச்சைகளுக்கு பிறகு ஆகஸ்ட் 9ஆம் தேதி கவுண்டபாளையம் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய படத்திற்கு திரையரங்கள் கிடைக்காமல் இருக்கிறது என்றும், இதற்கு காரணம், என் மீது வைத்திருக்கும் வன்மம் தான் என்றெல்லாம் ரஞ்சித் குற்றம் சாட்டி இருந்தார்.
பின் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் ரஞ்சித், என்னுடைய படத்திற்கு எந்த ஒரு ஜாதி பெயரையும் வைக்கவில்லை. கவுண்டம்பாளையம் என்பது ஒரு சட்டமன்ற தொகுதி.
ஆணவக்கொலை குறித்த சர்ச்சை:
என் மீது பழி சுமத்த வேண்டும் என்று தேவையில்லாத சிலர் செய்யும் வேலை இது. இந்தப் படத்தில் ஆணவ படுகொலை என்பது வன்முறையோ, கலவரமோ கிடையாது என்பதை தான் சொல்லியிருக்கிறேன். பிள்ளைகள் மீது வரும் அக்கறையோட வெளிப்பாடு தான் இது என்று கூறியிருந்தார். இப்படி நடிகர் ரஞ்சித் கூறி இருந்ததற்கு பலரும், இவர் ஆணவ படுகொலைக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்று மோசமாக விமர்சித்து பேசி இருந்தார்கள். இதை அடுத்து இது தொடர்பாக ரஞ்சித், நான் சொன்ன கருத்தை வேறு மாதிரியாக திரித்து சொல்கிறார்கள். என் மீது எதற்கு இவ்வளவு வன்மம்? யாராவது ஆணவ கொலைக்கு ஆதரவு கொடுப்பார்களா? நான் கொடுக்க மாட்டேன்.

ரஞ்சித் விளக்கம்:
நான் எந்த இடத்திலுமே ஆணவ கொலைக்கு ஆதரவானவர் என்று சொல்லவில்லை என்று பேசி இருந்தார். இந்த நிலையில் இது குறித்து பேட்டியில் விசிக தலைவர் திருமாவளவன், ஆணவக் கொலையை வன்முறை இல்லை என்று சொல்வது அரசியல் அறியாமையாக இருக்க வேண்டும், இல்லையென்றால் வணிக நோக்கமாக இருக்க வேண்டும். ஆணவக் கொலை என்ற பெயரில் திரைப்படம் எடுத்து சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசுவது, கருத்துக்களை பரப்புவது நாட்டுக்கு நல்லது கிடையாது. அவர்கள் இது மாதிரி கருத்துக்களை சொல்லுவது கவலை அளிக்கிறது என்று பேசியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=wDos6L_0Jjo
விசிக தலைவர் பேட்டி:
அதன் பின் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக சார்பில் நடிகர் ரஞ்சித் மீது புகாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த புகாரில், நடிகர் ரஞ்சித்தின் கவுண்டபாளையம் படத்தில் டிரைலரில் திட்டமிட்ட சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், விசிக கட்சியை அவமானப்படுத்தும் நோக்கிலும் பல காட்சிகள் வைத்திருந்தார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் மற்றும் தணிக்கை குழுவிடம் நாங்கள் புகார் கொடுத்தோம். அதற்குப் பின் அந்த காட்சிகள் நீக்கப்பட்டு வெளியாகியிருந்தது. அதை அடுத்து நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்த போது ஆவண படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும், அது தவறில்லை வன்முறை கிடையாது என்றெல்லாம் கூறியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=qCjPU7ezmEw
விசிக சார்பில் அளித்த புகார்:
ஆவணக் கொலை தொடர்பாக தமிழகத்தில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அதனை நியாயப்படுத்தும் வகையில் நடிகர் ரஞ்சித் பேசியிருப்பது ரொம்ப மோசமான செயல். இரண்டு சமூகங்கள் இடையே பிரிவினை ஏற்படுத்தவும், ஆவணக் கொலைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும் திட்டமிட்டு அவர் மோசமாக கூறியிருக்கிறார். சமூகத்தை பிளவுபடுத்த வேண்டும் என்ற கொடூரமான எண்ணத்தை காட்டுகிறது. படுகொலைகளை ஆதரிக்கும் அவருடைய வன்மமான எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் நடிகர் ரஞ்சித் பேசி இருக்கிறார். இதனால் ரஞ்சித் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.






