இந்து கடவுளை நடிகை டாப்ஸி அவமதித்து இருக்கிறார் என்று அவர் மீது காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டு இருக்கிறார் டாப்ஸி பன்னு. இவர் பஞ்சாபிய சீக்கியக் குடும்பத்தில் பிறந்தவர். சினிமா துறையில் நுழையும் முன் இவர் மாடலிங் நிபுணராக பணியாற்றினார். அதன் பிறகு இவர் 2010 இல் சும்மாண்டி நாதம் என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.
மேலும், இவர் தமிழில் 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நடிகை டாப்சி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். பின் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் பாலிவுட்டில் நடிக்க சென்றார்.
பாலிவுட்டில் டாப்ஸி:
பின் இவர் பாலிவுட்டிலேயே அதிக கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது டாப்சி அவர்கள் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் லீட் நடிகையாக வலம் வர முடியவில்லை என்றாலும், இந்தியில் இவர் நடித்த, ’பிங்க்’, ’நாம் ஷபானா’ படங்கள் அவரை கவனிக்க வைத்தன. இதையடுத்து இவர் பல இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு சமீப காலமாகவே நடிகை டாப்ஸி அவர்கள் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
டாப்ஸி நடிக்கும் படங்கள்:
அந்த வகையில் தற்போது டாப்ஸி அவர்கள் விளையாட்டு வீராங்கனை ஒருவரின் பயோபிக் படத்தில் ஆர்வமாக நடித்து வருகிறார். இதற்காக இவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் புகைப்படம் கூட சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆனது. பின் இவர் நடிகர் ஜெயம் ரவி நடித்துவரும் ஜன கண மன என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்து கடவுளை நடிகை டாப்ஸி அவமதித்து இருக்கிறார் என்று அவர் மீது எழுந்துள்ள புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
டாப்ஸி அணிந்த ஆடை:
அதாவது, சமீபத்தில் நடிகை டாப்ஸி ஆடை அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் கவர்ச்சியான ஆடை அணிந்திருந்து கழுத்தில் மகாலட்சுமி அம்மன் உருவத்துடன் கூடிய நெக்லஸ் ஒன்றையும் அணிதிருந்தார். இதுதான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. டாப்ஸி கவர்ச்சி ஆடையில் கடவுள் உருவம் உள்ள நெக்லஸை எப்படி அணியலாம்? என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் கேள்வி இருந்தார்கள்.
Part – 2 of the conversation.
— काश/if Kakvi (@KashifKakvi) January 3, 2021
Munnawar and his fellows, Edvin Anthony, Prakhar Vyas, Priyam Vyas and Nalin Yadav were arrested under sections 295-A, 298, 269, 188 & 34 of the IPC.@Anurag_Dwary @brajeshabpnews@ranjan_Bpl @manishbpl1 @PNaveenTOI @DGP_MP#ComediansArrest pic.twitter.com/CdkIiTiFHO
டாப்ஸி மீது புகார்:
இந்த நிலையில் பாஜக எம்எல்ஏவின் மகன் ஏக்லவ்யா கவுர் என்பவர் நடிகை டாப்ஸின் மீது மத்திய பிரதேசத்தின் இந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில் அவர், நடிகை டாப்ஸி அணிந்திருந்த ஆடை மற்றும் அணிகலன்கள் எல்லாமே இந்து கடவுள் மற்றும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களை அவமானப்படுத்துவதாகவும், அவர்களுடைய மனதை புண்படுத்தும் விதமாக இருப்பதாகவும் புகார் அளித்திருக்கிறார். ஆனால், இந்த புகார் குறித்து நடிகை டாப்ஸின் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. குற்றசாட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக ஆய்வாளர் கபில் சர்மா தெரிவித்திருக்கிறார்.