இயக்குனர் பா. ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் விக்ரம். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்து இருக்கிறது. அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் தங்கலான்.

இந்த படத்தை பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசை இருக்கிறார்.
தங்கலான் படம் :
மேலும், இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருமே தங்கலான் படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்த படம் இந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் வருகிற 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனிடையே தங்கலான் படத்தின் 'நன்றி தெரிவிக்கும் விழா' சில தினங்களுக்கு முன் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள்.
நன்றி தெரிவிக்கும் விழா:
அப்போது அனைவருக்குமே ஒரு புத்தர் சிலையை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அன்பாக வழங்கி இருந்தார். அதற்குப் பின் விழாவில் இயக்குனர் பா. ரஞ்சித், தமிழ் சமூகத்திலேயே தங்கலான் ஒரு முக்கியமான வெற்றியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும் உழைப்பு ரொம்பவே முக்கியம். நான் இன்னைக்கு இங்கு நிற்பதற்கு முக்கிய காரணம் உழைப்பால் தான். என்னையும் தாண்டி இந்த படத்திற்காக நிறைய பேர் பயங்கரமாக உழைத்திருக்கிறார்கள்.

ரஞ்சித் மீது புகார்:
அது காசுக்காக மட்டும் இல்லை, என் மேலே அவர்கள் வைத்திருக்கும் அன்பும் ஒரு காரணம் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் கொடுத்திருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, பூந்தமல்லி நீதிமன்ற வழக்கறிஞர் பொற்கொடி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் பா ரஞ்சித் மீது புகார் கொடுத்திருக்கிறார். அந்த புகாரில், புத்த மதத்தை உயர்த்துவதற்காக வைணவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் தங்கலான் படத்தில் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.
https://www.youtube.com/watch?v=TBB_O5qUNGM
புகாரில் கூறி இருப்பது:
இந்த சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும். இது தொடர்பாக பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து பெண் வழக்கறிஞர் பொற்கொடி செய்தியாளர்களை சந்தித்து, சர்ச்சைக்குரிய காட்சிகளை தங்கலான் படத்திலிருந்து நீக்காவிட்டால் படத்தை தடை செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கை தொடர்வோம் என்று கூறியிருக்கிறார். இதற்கு இயக்குனர் பா. ரஞ்சித் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






