விஜய் ரசிகர்களின் தொடர் விமர்சனத்தால் “ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் பின்னூட்டங்களே அந்த நடிகரின் தரத்தை தெரிவித்துவிடுகிறது” என்று ட்வீட் செய்தார் நடிகர் கருணாகரன். விஜய் ரசிகர்கள் தொடர்ந்து வறுத்தெடுத்து வந்ததால் விஜய் ரசிகர்களை அடிமைகள் என்றும் கூறியிருந்தார் கருணாகரன். விஜய் ரசிகர்களிடன் தொடர்ந்து ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் கடும் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் நடிகர் கருணாகரனுக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி தொடர்ச்சியாக திட்டி தீர்த்தனர். அத்தோடு நடிகர் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை உருவாக்கினர்.Friends Good night .... the fear that is being created in this society is unwanted for this society realise it work for it don’t defend in cheap ways use word power not by threat calls grow up work for the state nation not for individuals but for the society ☝️
— Karunakaran (@actorkaruna) October 7, 2018
Comments posted by an actors fans define the quality of an actor ☝️
— Karunakaran (@actorkaruna) October 5, 2018
தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கு நடிகர் கருணாகரனுக்கும் வாக்குவாதம் முற்றிப்போக ஒரு சில ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தாகவும், இதனால் நடிகர் கருணாகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 8) புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.Humble request to other actors fans pls avoid using abusive comments in the name of supporting me #PleaseBro
— Karunakaran (@actorkaruna) October 7, 2018





