-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

நேற்று வாக்களிக்க வந்த விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் – என்ன காரணம் இதான்.

0
167

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவராக விஜய் வாக்களித்த நிலையில் தற்போது அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. நேற்று காலை 7 மணி முதலே வாக்கு பதிவுகள் துவங்கியது.

-விளம்பரம்-

இதில் மக்கள் அனைவரும் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வந்தனர். அதே போல சினிமா பிரபலங்களும் காலை முதலே தங்கள் வாக்குகளை பதிவு செய்துவந்தனர். அந்த வகையில் நடிகர் அஜித் காலையிலேயே முதல் ஆளாக சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். அதே போல நடிகர் ரஜினி, விஜய், விக்ரம் என்று முன்னனி நட்சத்திரங்கள் பலரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வந்தனர்.

அங்கே தமிழக வெற்றிக் கழக தலைவராக தனது முதல் ஓட்டை பதிவு செய்தார். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் நடிகர் விஜய் ஒரு இளம் பச்சை சட்டை அணிந்து கருப்பு மாஸ்க் அணிந்து தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்று இருந்தார். ஆனால், இந்த முறை வெள்ளை சட்டை அணிந்து எந்த வித ஆராவரமும் இல்லாமல் சென்று தனது வாக்கை செலுத்தி இருந்தார் விஜய்.

-விளம்பரம்-

இந்நிலையில், விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார். நேற்று விஜய் வாக்களிக்க வந்த போது அவரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவரை வாக்கு சாவடிக்கு அழைத்து சென்றனர். இப்படி ஒரு நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 200க்கும் மேற்பட்ட நபர்களுடன், தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் சென்றதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் விஜய் மீது புகார் அளித்துள்ளார்.

-விளம்பரம்-

கடந்த பிப்ரவரி மாதம் தான் நடிகர் விஜய் தனது கட்சிப் பெயரை அறிவித்து இருந்தார். மேலும், 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார். இப்படி முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் அறிவித்து இருக்கிறார்.

விஜய்யின் புதிய கட்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படத்தோடு சினிமாவில் இருந்து விலக இருக்கிறார் விஜய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news