சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.
இவரது விமர்சனத்தை நேரடியாக பல பிரபலங்கள் எதிர் பேசி இருக்கின்றனர். குறிப்பாக கெளதம் மேனன் ஒரு பேட்டியில் எறங்கி ஏதாவது செய்யணும் போல இருக்கு’ என்று பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் விஜய் ஆண்டனியும் ப்ளூ சட்டை விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். ரத்தம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் ‘ரோமியோ’ திரைப்படம் வெளியாகி இருந்தது.
படத்தில் விஜய் ஆண்டனி மலேசியாவில் வேலை பார்த்து இருக்கிறார். பின் அவர் விடுமுறையில் தன்னுடைய சொந்த ஊருக்கு வருகிறார். அப்போது விஜய் ஆண்டனி வருவதை அறிந்து அவருடைய பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இன்னொரு பக்கம் சினிமாவில் எப்படியாவது பெரிய கதாநாயகி ஆக வேண்டும் என்ற கனவில் இருக்கிறார் மிர்னாலினி. பின் இரு வீட்டார் சம்மதத்துடன் ஒரு வழியாக விஜய் ஆண்டனி, மிருணாலினி ரவியை திருமணம் செய்து கொள்கிறார்.
இந்த திருமணத்தில் மிர்னாலினிக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. இந்த விஷயம் விஜய் ஆண்டனிக்கு தெரிய வருகிறது. அதற்கு பிறகு அவர் என்ன செய்தார்? தன்னுடைய மனைவியின் ஆசையை நிறைவேற்றினாரா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? பிரிந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான விமர்சனத்தை பெற்று தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இப்படி ஒரு நிலையில் வழக்கம் போல இந்த படத்தை விமர்சனம் என்ற பெயரில் கழுவி ஊற்றி இருந்தார் ப்ளூ சட்டை. அதிலும் ‘ இந்த படத்தில் நல்ல திரைக்கதை இல்லை. படத்தில் ஹீரோ – ஹீரோயினும் ஒன்னு சேரனும் என்ற எண்ணமே வரவில்லை. அதிலும் அம்மா கிட்ட பேசினாலும், வில்லன் கிட்ட பேசினாலும் ஒரே மாதிரி தான் பேசுகிறார் விஜய் ஆண்டனி. அதிலும் இந்த படத்தில் எடிட்டிங் வேலையை கூட இவர் தான் செய்துள்ளார். தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கேட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கேட்டான்’ என்று விமர்சித்து இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் ப்ளூ சட்டை விமர்சனம் குறித்து பதிலடி கொடுத்துள்ள விஜய் ஆண்டனி ‘பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் திரு.புளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என் அன்பு மக்களே.ரோமியோ ஒரு நல்ல படம் போய் பாருங்க புரியும். ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க ‘ என்று பதிவிட்டுள்ளார்.