பா ஜ கவில் மோதல் தொடங்கியது.! எச் ராஜா மீது காண்டான தமிழிசை.!

0
818
Raja-tamilisai
- Advertisement -

அடுத்த மாதம் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. காங்கிரஸும், பாஜக.வும் வேட்பாளர்களை அறிவிக்க தாமதம் செய்த நிலையில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி பாஜக.வின் 5 வேட்பாளர்களின் பெயரை பா ஜ க கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அறிவித்தார்.

-விளம்பரம்-

இது பா ஜ மத்தியில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதற்கு முக்கிய காரணமே கட்சியின் தலைமை அறிவிக்கும் முன்பே ஹெச்.ராஜா வேட்பாளர்களை அறிவித்தது தான். எச் ராஜா அறிவித்த பின்னர் தான் பாஜக தலைமைநேற்று (மார்ச் 21) முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.

- Advertisement -

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக.வுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஹெச்.ராஜா நேற்று தெரிவித்த அதே 5 வேட்பாளர்களும் அதிகாரபூர்வ பட்டியலில் இடம் பெற்றனர். இதனால் கடுப்பான தமிழகத்தின் பா ஜ க கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் எச் ராஜா மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.

Image result for h raja tamilisai

சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தமிழிசை, தமிழகத்தில் பாஜக தலைவர் நானா இல்லை அவரா. நானும் மற்ற தலைவர்களும் அவர் அறிவிக்கும் வேட்பாளர்களின் பட்டியலை கேட்கவேண்டுமா என்று மிகவும் காட்டமாக கூறியுள்ளார். அதேபோல எச் ராஜா தன்னுடைய தொகுதியை உறுதி செய்யவே வேட்பாளர்கள் பட்டியல் வருவதற்கு முன்பாக தனது பெயரையும் அங்கே பதிவு செய்துவிட்டார் என்று பாஜக தரப்பில் ஒரு பேச்சும் அடிபடுகிறது.

-விளம்பரம்-
Advertisement