கொரோனவால் இறந்தும் வசந்த குமரின் உடல் மட்டும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது ஏன் ? இதான் அந்த உண்மை.

0
2982
vasantha

வசந்த் அண்ட் கோ, வசந்த் தொலைக்காட்சின் நிறுவனரும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியுமான வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் நேற்று (ஆகஸ்ட் 28) உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. பொதுவாக கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடலை மக்கள் பார்வைக்கு வைப்படுவது இல்லை. ஆனால், வசந்த குமாரின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

- Advertisement -

தந்தையின் மரணம் குறித்து பத்திரிகையாளர்களை நேற்று (ஆகஸ்ட் 28 )சந்தித்த விஜய் வசந்த அப்பா இன்று (28.08.2020) 6.56 மணிக்கு இயற்கை எய்தினார். கொரோனா டெஸ்ட் எடுத்து பின்னர் அவர் சிகிச்சை எடுத்து கொண்டிருந்தார். அதன் பின்னர் அப்பாவிற்கு வெண்டிலேட்டர் வைக்கக்கூடிய சூழ்நிலை வந்தது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு மூச்சுவிட ஆரம்பிக்கும்போது பாக்டீரியா இன்பெக்ஷன் ஆனது. மீண்டும் சிகிச்சை கொடுக்க வேண்டிய நிலை வந்தது.

மருத்துவர்கள் போராடியும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை. அப்பாவிற்கு இரண்டாவது முறை எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்ட போது நெகட்டிவ் என வந்தது, கொரோனாவால் அப்பா இறக்கவில்லை. அப்பா நலம் பெற வேண்டும் என்று நினைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

வசந்த குமார் இறப்பதற்கு முன்பாக அவருக்கு கொரோனா தொற்று  இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் அவரது உடலுக்கு பாதுகாப்பு உடைகள் அனுவிக்கப்பட்டு, தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அவரது நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் 10 மணி அளவில் அவரது உடல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

Advertisement