பிரியா, நீயும் நானும் சேர்ந்து அடுத்த குழந்தைய பெத்துக்கலாம் – ஷாருக்கானின் பேச்சால் சர்ச்சை.

0
3481
- Advertisement -

மேடையில் அட்லீ மனைவியிடம் ஷாருக்கான் கொச்சையாக பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார்.

-விளம்பரம்-

இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இந்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இவர் தளபதி விஜய்யை வைத்து முதலாக தெறி படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. பின் அட்லீ மெர்சல் படத்தை இயக்கி இருந்தார்.

- Advertisement -

விஜய்-அட்லீ படம்:

இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆக ஆனதே மெர்சல் படத்திற்குப் பிறகு தான். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயை வைத்து பிகில் என்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் அவர்கள் ராயப்பன், மைக்கேல் என்று அப்பா – மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார்.

ஷாருக்கான்-அட்லீ படம்:

பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கி வருகிறார். இந்த படத்தை ஷாருக்கானின்ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இசை வெளியிட்டு விழா:

அதோடு இந்தப் படம் எடுக்க ஒரு முக்கியமான காரணம் விஜய் சார் தான் என்று சமீபத்தில் அட்லீ கூறி இருந்தார். இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகயிருக்கிறது. மேலும், சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்று இருந்தது. இந்த இசை வெளியிட்டு விழாவில் ஷாருக்கான், அட்லி உட்பட படகு குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஷாருக்கான் சொன்னது:

அப்போது நிகழ்ச்சியில் ஷாருக்கான் கூறியிருந்தது, பிரியா நன்றி. நாம் ஒரு புது குழந்தையை பெற்றுக் கொள்வோம். நான் இல்லை. நீங்களும் அட்லீயும் சேர்ந்து தான். தற்போது நாம் நண்பர்களாகி விட்டோம். நான் கோ ப்ரோடியூசராக சேர்ந்து கொள்கிறேன் என்று பேசி இருக்கிறார். இப்படி ஷாருக்கான் மேடையில் கொச்சையாக பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியா வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் கண்டனம் தெரிவித்து ஷாருக்கானை விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement