அட, குக்கு வித் கோமாளி ஆண்டி இந்த sk படத்துல நடிசிருகாங்களா ? இதோ புகைப்படம்.

0
2027
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. மேலும் இந்த சீசன் புதிய குக்களும் புதிய கோமாளிகளும் கலந்து கொண்டுள்ளார். அவர்களில் ஒருவர் தான் நடிகை ஆண்ட்ரியான்.

- Advertisement -

நடிகை ஆண்ட்ரியான் :

இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் என்றாலும் தன்னுடைய பள்ளிப்படிப்பை தமிழ் நாட்டில் உள்ள பாண்டிச்சேரியில் தான் பயின்றார். பின்னர் மேற்படிப்பிற்காக பிரான்ஸ் சென்று கால்நடை மற்றும் செவிலியர் படிப்பை முடித்தார். ஆனால் சினிமாவின் மீது கொண்ட காதல் காரணமாக இந்திய வந்த இவர் சில திரைப்பட செட்களில் நடிக்க தொடங்கினார். பின்னர் பிரென்ச் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். ஆண்ட்ரியான்

சினிமா அறிமுகம்

இப்படி சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படத்தில் புகழ்பெற்ற பாடலான “அதிரடி” பாடலில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார். பின்னர் மாடலிங், போட்டோ சுட என களமிறங்கிய இவர் குமரன் சில்க்ஸ், விஜயா என பல விளம்பரங்களில் நடித்திருக்கிறார். மேலும் சில படங்களில் டப்பிங் கூட செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

நடித்த படங்கள் :

இந்நிலையில் இவர் சினிமாவில் துணை கதாபாத்திரமாக சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் கதாபாத்திரத்தில் தான் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் சில சிறிய பஜ்ஜட் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். உதாரணமாக எனக்குள் ஒருவன், ஜீரோ, கண்டேன் காதல் கொண்டேன், வீர சிவாஜி, மேல்நாட்டு மருமகன் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் 2017ஆம் ஆண்டு வெளியான ரம் என்ற திரைப்படத்தில் முதன் முறையாக கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் தான் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டுள்ளார். மேலும் இவருடன் ஜி.பி.முத்து, ப்ரோமோவில் தீபன் போன்றவர்கள் புதிய கோமாளிகளாக வந்துள்ளார். மே

Advertisement