புதிய கோமாளிகள், பாக்கியலட்சுமி சீரியல், பிக்பாஸ் பிரபலங்கள் – குக் வித் கோமாளி 4ன் போட்டியாளர்கள் – யார் யார் தெரியுமா ?

0
160
cooku
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கவுள்ள நிலையில் அதில் கலந்து கொள்ளவும் போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி 4 :

இப்படி பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சின் சீசன்6 கடந்த 22ஆம் தேதி 105 நாட்கள் மிகவும் பிரம்மாண்டமாக ஓடி நிறைவடைந்தது இதில் அசீம் வெற்றியடைந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் அடுத்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்ப தொடங்கி விட்டனர். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது அதோடு இந்த நிகழ்ச்சியின் முக்கியமான சில போட்டியாளர்கள் யார் யார் என்று தெரிந்து விட்டது.

அந்த வகையில் குக் வித் கோமாளி ப்ரோமோவை வைத்து பார்த்தால் வரும் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களில் கோமாளியாக இருந்த புகழ், KPY பாலா, குரேசி உள்ளிட்டோர் திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருவதினால் அவர்கள் கலந்து கொள்ளவது சந்தேகம்தான், மேலும் ப்ரோமோவில் தீபன், ஜிபி முத்து ஆகியோர் கோமாளிகளாக புதிதாக வந்துள்ளனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் பிரபலம் :

இருந்த போதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முழு போட்டியாளர்களின் விவரம் தெரியாத நிலையில் புதிய போட்டியாளர்கள் யார்? யார்? என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர்களில் பிக் பாஸ் புகழ் ஷெரின், விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சிமி சீரியல் பிரபல விஷால் போன்றவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். அதோடு கடந்த சீசன்களில் பயணித்த ஷிவங்கியும் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கிறார்.

ட்விஸ்ட் :

இதில் ட்விட்ஸ் என்னவென்றால் குக் வித் கோமாளி ப்ரோமோவில் ஷிவாங்கி இல்லாத நிலையில் ட்விஸ்ட கொடுக்கும் வகையில் கலந்து கொள்ள இருக்கிறாராம். மேலும் இவர்களோடு கோலிவுட் சூப்பர் ஸ்டார் அஜித் நடித்த வலிமை படத்தில் அஜித்திற்கு தம்பியாக நடித்த ராஜ் ஐயப்பாவும் இந்த சீசனில் கோமாளியாகி வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Advertisement