என்னை பிடிக்காதவங்களுக்கு நான் சொல்வது இதுதான் – பிறந்தநாளில் அஸ்வின் வெளியிட்ட உருக்கமான வீடியோ.

0
251
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் ஆல்பம் பாடல்கள், வெப் தொடர் என்று நடித்து இருக்கிறார். ஆனால், இதற்கு முன்னாடி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்து இருந்தார். அதே போல ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற படங்களில் சிறு ரோலில் அஸ்வின் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இப்படி 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வந்தவர் அஸ்வின்.

-விளம்பரம்-
அஸ்வின் Archives - Tamil Behind Talkies

இருந்தும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தான் அஸ்வின் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டும் இல்லாமல் இந்த சீசன் மூலம் இவர் பலரது பெண்கள் மனதையும் கவர்ந்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல ஆல்பம் பாடல்களில் அஸ்வின் நடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘ஓ மனப்பெண்ணே’ படத்தில் செகண்ட் ஹீரோவாக அஸ்வின் நடித்து இருந்தார். பின் இவர் முதன் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். இயக்குனர் ஹரிஹரன் தான் இந்த படத்தை இயக்கி இருந்தார்.

- Advertisement -

என்ன சொல்ல போகிறாய் படம்:

மேலும், இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக் வித் கோமாளி புகழ் என்று பலர் நடித்து இருந்தார்கள். ஆனால், இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு கேலிக்கு உள்ளாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. அதில் அவர், கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கிவிடுவேன். இதுவரை நான் கேட்ட 40 கதைகளில் நான் தூங்கி விட்டேன். ஆனால், நான் கேட்ட கதைகளில் தூங்காத ஒரு கதை தான் என்ன சொல்ல போகிறாய். அந்த கதை பிடித்துப்போய் நான் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன் என்று பேசி இருந்தார்.

அஸ்வின் பட விமர்சனம்:

இப்படி இவரை பேசியதை கேட்டு பலரும் விமர்சித்து இருந்தார்கள். இதுகுறித்து அஸ்வினும் மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுத்து இருந்தார். பின் பல சர்ச்சைகளுக்கு பின் இந்த படம் வெளியாகி இருந்தது. ஆனால், இந்த படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்து இருந்தது. இவருடைய பேச்சை கேட்டு பலரும் கோபமடைந்து இருந்ததே இதற்கு காரணம் என்றும் கூறி இருந்தார்கள். மேலும், எதிர்பார்த்த வெற்றியடையவில்லை என்றாலும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. பின் தொடர்ந்து அஸ்வின் எது போட்டாலும் சோசியல் மீடியாவில் விமர்சித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அஸ்வின் லைவ் வீடியோ:

தற்போது அஸ்வினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் மீம்ஸ் தான் சோசியல் மீடியாவில் உலா வருகிறது.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் அஸ்வினுடைய பிறந்த நாள் வந்திருந்தது. இதற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி இருந்தார்கள். இந்த நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அஸ்வின் லைவ் வீடியோ ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்காக நிறைய விஷயங்கள் செய்து இருக்கிறீர்கள். என் மீது இவ்வளவு அன்பு வைத்து பண்ணும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு நான் தகுதியானவனா? என்ற கேள்வியும் எனக்குள் தோன்றும்.

Memes'ஸை எல்லாம் என் நண்பர்கள் எனக்கு அனுப்பிச்ச அப்போ ' - மன வேதனையுடன்  அஸ்வின் கொடுத்த விளக்கம். - Tamil Behind Talkies

ட்ரோல் செய்பவர்களுக்கு அஸ்வின் சொன்னது:

அதுவும் சமீபத்தில் நான் நிறைய ஆக்டிவாக இல்லை என்றாலும் எனக்காக பல விஷயங்கள் செய்து இருந்தீர்கள். நான் எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.அதிலும் சில விஷயங்கள் ரசிகர்கள் செய்து இருப்பதை பார்க்கும் போது எனக்கு வியப்பாகவும் இருக்கு. என்னுடைய பிறந்த நாளுக்காக பலரும் நிறைய விஷயங்கள் செய்திருந்தார்கள். அது பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மேலும், என்னை பிடித்தவர்களுக்கு நன்றி. என்னை பிடிக்காதவர்கள் இருந்தால் அவர்களிடம் ஒன்றை சொல்கிறேன். உங்களுக்கு என்னை பிடிக்க அளவுக்கு உழைத்து படங்கள் செய்வேன் என்று கூறி இருந்தார்.

Advertisement