குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்கு ரக்ஷன் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவி என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான். அந்த அளவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், பிக் பாஸ், காமெடி சாம்பியன்ஸ், பிபி ஜோடிகள் என்று பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் டாப் லிஸ்டில் இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக சென்று கொண்டு இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்து இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். மேலும், இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் இருக்கிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி:
இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு இருக்கிறார்கள். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ரக்ஷன். அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மாறினாலும் கடந்த 3 சீசன்களாக மாறாமல் இருப்பது இந்த நிகழ்ச்சியின் நடுவர், தொகுப்பாளர் தான்.
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி :
தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்ஷனுக்கு கிடைக்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரக்ஷன் அவர்கள் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியில் தான் தொகுப்பாளராக பங்கு பெற்று இருந்தார். ஜாக்லின் மற்றும் ரக்ஷன் நடத்திவந்த காமெடி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து இவர் துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்து இருந்தார்.
ரக்ஷன் பற்றிய தகவல்:
அதற்கு பிறகு பெரிதாக வாய்ப்புகள் அமையாததால் ரக்ஷன் மீண்டும் விஜய் டிவி பக்கமே வந்துவிட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரக்சன் தான் தொகுப்பாளராக தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், 3 சீசன்களாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த 3 சீசன்களிலும் ரக்ஷன் தான் தொகுப்பாளர். முதல் சீசனில் ரக்ஷன் உடன் நிஷா தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சி மூலம் ரக்ஷனுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது.
ரக்ஷன் வாங்கும் சம்பளம்:
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் 2022 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா நடந்தது. அதில் சிறந்த தொகுப்பாளருக்கான விருதை ரக்சன் பெற்றிருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் சம்பளம் குறித்த விவரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்கு ரக்ஷன் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறாராம். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பாராட்டி டிரக்சன் இன்னும் மென்மேலும் வளர வேண்டும் என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.