மதுரை முத்துவை ‘தொடப்ப கட்டையை எடுத்து அடுசிடுவேன்’னு சொன்ன சர்ச்சை – முதல் முறையாக ஷிவாங்கி பதிலடி.

0
8838
shivangi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா, ரித்திகா, பவித்ரா ஆகியோர் வெளியேறியுள்ளார்கள். இந்த சீசனில் மதுரை முத்து வெளியேறினாலும் அடிக்கடி இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அஸ்வினுடன் ஷிவாங்கி சமைத்துக்கொண்டு இருந்தார். அப்போது பாலா, சரத்தை பார்த்து எதாவது பாடல் பாடுங்க என்று கேட்க, அதற்கு ஷிவாங்கி, அஸ்வின் பாடுவார் என்று சொன்னார். அப்போது மதுரை முத்து சிவங்கியை பார்த்து ‘நீ 7 கட்டைல பாடு அவரு (சரத்) வெளக்குமாத்து கட்டைல பாடுபார்’ என்று சொன்னார்.

This image has an empty alt attribute; its file name is 1-112-1024x592.jpg

அதற்கு ஷிவாங்கி ‘தொடப்ப கட்டையை எடுத்து அடுசிடுவேன்’ என்று சொன்னதும் மதுரை முத்து ஒரு கனம் முகம் சுளித்தார். ஆனால், மற்றவர்கள் எல்லாம் சிரிக்க எடிட்டரும் ‘எள்ளு வய பூக்களேயே’ பாடலை BGM போட்டு காமெடியாக காட்டி இருந்தார். ஷிவாங்கியின் இந்த செயலால் ரசிகர்கள் பலரும் கடுப்பாகி இருகிறார்கள். என்னதான் ஷிவாங்கி குக்கு வித் கோமாளியின் செல்லப் பிள்ளை என்றாலும் கொஞ்சம் பாத்து பேச வேண்டும் என்பது தான் பலரின் அட்வைசாக இருந்து வந்தது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஷிவாங்கி தனது ட்விட்டர் பக்கத்தில், நீங்கள் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் மக்களுக்கு எப்போதும் ஏதாவது குறை சொல்ல ஒன்று இருக்கும் அது தான் வாழ்க்கை என்று பதிவிட்டுள்ளார். ஷிவாங்கியின் இந்த பதிவை பார்த்த பலரும், இதனை ஷிவாங்கி மதுரை முத்து குறித்து எழுந்த சர்ச்சைக்காக தான் போட்டிருக்கிறார் என்பதை புரிந்துகொண்டு ஷிவாங்கிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement