குக்கு வித் கோமாளியில் மாற்றப்பட்ட முக்கிய நபர், பரவாயில்ல இவரும் நல்லா தான் பண்ணுவாரு. யார் பாருங்க.

0
710
cooku
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. மேலும், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வந்த வெங்கடேஷ் பத் மற்றும் தாமு காமெடி செய்கிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார்.

- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சி 3 பட்டியல்:


மேலும், சில தினங்களுக்கு முன்பு தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் வந்திருந்தது. அதில் குக்குகளாக- அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், வித்யூலேகா என்று பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதேபோல் கோமாளியாக சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா, குரேஷி, மூக்குத்தி முருகன், பரத் போன்ற பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி தொகுப்பாளர்:

இவர்களை தவிர இந்த நிகழ்ச்சியில் மதுரை முத்து, புகழ் இருவரும் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி குறித்து புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், கடந்த இரண்டு சீசன்களிலும் ரக்ஷன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். இந்த முறை நிகழ்ச்சியை மா கா பா தொகுத்து வழங்க இருக்கிறார். தற்போது அதற்கான புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

மாகாபா ஆனந்த்:

இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு தான் இதை மாகாபா தொகுத்து வழங்கபோறா? இல்லை ரக்ஷனா? என்பது தெரியும். விஜய் டிவியில் மிக பிரபலமான தொகுப்பாளராக திகழ்பவர் மாகாபா ஆனந்த். இவர் ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். பின் விஜய் டிவியில் வருடம் வருடம் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

Ma Ka Pa Anand Biography, Age, Family, Wife, Salary & Contact Details

மாகாபா ஆனந்த் நிகழ்ச்சிகள்:

அதற்குப் பிறகு இவர் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஆங்கரிங் செய்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர், கிங்ஸ் சூப்பர் டான்ஸ், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, முரட்டு சிங்கிள், ராமர் வீடு என விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கியிருக்கிறார். இவர் சின்னத்திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து இருக்கிறார்.

Advertisement