போன சீசனில் சக்தியை போல இந்த சீசனிலும் ஒரு டிக் டாக் பிரபலத்தை கோமாளியாக களமிறக்கி இருக்கும் விஜய் டிவி.

0
317
cooku
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

-விளம்பரம்-

இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு உள்ளார்கள். பின் இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட குக் வித் கோமாளியின் சீசன் 3 எப்போது வரும்? என்று பலரும் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டும் கேட்டும் வந்தார்கள்.

- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி:

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோக்கள் எல்லாம் வெளியாகி உள்ளது. அதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக- அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப் என்று பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதேபோல் கோமாளியாக சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா, குரேஷி, மூக்குத்தி முருகன், பரத் போன்ற பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

டிக் டாக் பிரபலம் சீதாள் கிளாரின்:

இவர்களை தவிர இந்த நிகழ்ச்சியில் மதுரை முத்து, புகழ் இருவரும் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து புது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதுஎன்னவென்றால், இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக டிக் டாக் பிரபலம் ஒருவர் களமிறங்கி இருக்கிறார். அவர் வேற யாரும் இல்லைங்க சீதாள் கிளாரின். இவர் இன்ஸ்டாகிராமில் மிகப் பிரபலமான நபர். இவர் பெங்களூரை சேர்ந்தவர்.

-விளம்பரம்-

குக் வித் கோமாளி சீசன் 3ல் டிக் டாக் பிரபலம்:

மேலும், இவர் டிக்டாக்கில் தனது சகோதரியுடன் சேர்ந்து உருவாக்கிய பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக இருந்தது. இந்த அக்கா – தங்கை காம்போவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இந்நிலையில் தற்போது இவர் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்திருக்கிறார். இதுமட்டுமில்லாமல் இவர் மாடலிங் துறையிலும் பிரபலம். இப்படி டிக் டாக் வீடியோக்களில் கலக்கி வந்த சீதாள் கிளாரின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் எந்த அளவிற்கு கோமாளியாக கலக்குகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் ரோஷினி:

அதேபோல் இந்த நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகி ரோஷினி ஹரிப்பிரியன் குக்காக கலந்து கொள்ள இருக்கிறார். சினிமாவின் வாய்ப்புகள் காரணமாக பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து ரோஷினி விலகி இருந்தார். இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள். ஆனால், தற்போது எவர் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார். அதற்கான புரோமோ வெளியாகி இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மீண்டும் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement