அட, CWC3யில் கலந்துகொண்டுள்ள இவர் செல்வராகவனின் இரண்டாம் மனைவியின் நெருங்கிய உருவினராம்.

0
625
vidhyu
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த வாரம் தொடங்கப்பட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு உள்ளார்கள். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப்பில் உள்ளது. மேலும், இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. அதனால் கொரோனா லாக்டவுனில் இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். மேலும், குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி உள்ளது. இதில் குக்குகளாக- அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப்,ரோஷினி என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வித்யூ லேகா:

இந்த நிகழ்ச்சியில் பிரபலமான கோமாளிகளாக சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா இருகிர்ரகள். இவர்கள் வழக்கம் போல் தங்களுடைய கோமாளித்தனத்தை அழகாக செய்தீர்கள். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளாராக வித்யூலேகா கலந்து கொண்டிருக்கிறார். முதல் எபிசோடிலேயே நடுவர்களிடம் நல்ல பெயரை வாங்கி இருந்தார். மேலும், நடிகை வித்யுலேகா பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார்.

வித்யூ லேகா நடித்த முதல் படம்:

எஸ் பி ராமன் – மோகன் ராமன்

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம்“ படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூலேகா. அதன் பின்னர் பல்வேரு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மட்டும் தெலுங்கில் 6 படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் இயக்குனர் செல்வராகவனின் உறவினர் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

வித்யூ லேகா திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பெரும்பாலும் இவர் தனுஷை வைத்து பல படம் எடுத்து இருக்கிறார். மேலும், இவர் 2006 ஆம் ஆண்டு சோனியா அகர்வாலை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2010 வரை மட்டுமே நீடித்தது. கருத்து வேறுபாடு காரணமாக மட்டுமே பரஸ்பரம் பேசி விவகாரத்து பெற்றுக் கொண்டனர்.

செல்வராகவன் மனைவி- வித்யூ லேகா சொந்தக்காரர்:

பின் இவர் 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி ராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பிரபல நடிகை வித்யூ லேகாவின் சகோதரியும் ஆவார். அதாவது வித்யூ லேகா ராமனின் தந்தையும் நடிகருமான மோகன் ராமனின் சகோதரர் பி எஸ் ராமனின் மகள் தான் செல்வராகவனின் இரண்டாம் மனைவியான கீதாஞ்சலி ராமன். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement