மூன்றாம் இடத்தை விசித்திரா – குக்கு வித் கோமாளி பட்டத்தை வென்றது யார் தெரியுமா ? டாப் 2 இவங்க தான்

0
2053
- Advertisement -

கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சிதற்போது இறுதி கட்டத்தை நெருக்கி இருக்கிறது. நிகழ்ச்சி தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம்.

- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4:

இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, ஆண்ட்ரியன், ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி, VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அதோடு இந்த முறை கோமாளியாக இருந்த சிவாங்கி போட்டியாளராக கலந்து இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் முதலில் விசித்ரா, மைம் கோபி, கிரன், சிவாங்கி, ஸ்ருஷ்டி ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த வார எபிசோடில் எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. இதில் ஆண்ட்ரியன் தேர்வாகி
இருக்கிறார்.

-விளம்பரம்-

பைனலிஸ்ட் குறித்த தகவல்:

ஆகவே, இந்த நிகழ்ச்சியில் மைம் கோபி, விசித்ரா, கிரன், சிவாங்கி, ஸ்ருஷ்டி, ஆண்ட்ரியன் ஆகிய ஆறு பேரும் பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இதில் யாரு வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த நிகழ்ச்சியின் டைட்டில் மைம் கோபி ஆகியிருக்கிறார்.

டைட்டில் வின்னர்:

மேலும், ஸ்ருஷ்டிக்கு இரண்டாவது இடமும், மூன்றாவது இடத்தை விசித்திரா பிடித்து இருக்கிறார்கள். மேலும், இது உறுதியான தகவல் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இதுவரை நடந்த நிகழ்ச்சியில் வனிதா, கனி, ஸ்ருதிஹா என மூன்று பெண்கள் தான் டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார்கள். ஆனால், முதல் முறையாக ஒரு ஆண் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தை பெற்றிருப்பது முதல் முறை தான்.

Advertisement