நிறைவேறிய 10 ஆண்டு கனவு – ஹீரோவாக நடித்து முதல் படத்தின் டீசரை வெளியிட்ட அஸ்வின்.

0
1121
aswin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் அஸ்வினும் ஒருவர். இந்த சீசனில் பலரது பெண்கள் மனதையும் கவர்ந்தவர் அஸ்வின் தான்.

-விளம்பரம்-

அஸ்வின், விஜய் டீவிக்கு புதிதானவர் அல்ல, இவர் கடந்த 2015 ஆம் ஆண்டே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டை வால் குருவி’ என்ற சீரியலில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. ஜூனில் துவங்கிய இந்த சீரியல் அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது. இந்த சீரியல் மொத்தம் 100 எபிசோடுகள் மட்டும் தான் ஒளிபரப்பானது.இந்த சீரியலை தொடர்ந்து அஸ்வின் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நினைக்கத் தெரிந்த மனமே என்ற சீரியலில் நடித்தார்.

இதையும் பாருங்க : பொன்மனசெல்வனே – அஜித்தை எம் ஜி ஆராக சித்தரித்த அஜித் ரசிகர்கள் (இது நாள தான் அந்த மனுஷன் ரசிகர் மன்றத்த கலச்சாரு போல)

- Advertisement -

இந்த சீசனில் முதல் இடத்தை கனியும், இரண்டாம் இடத்தைஅஸ்வினும் , மூன்றாம் இடத்தை ஷகீலாவும் வென்றுள்ளனர். இனி அஸ்வினை பார்க்க முடியாதா என்று பல பெண் ரசிகைகள் ஏங்கி கொண்டு இருக்க அஸ்வின் தான் ஹீரோவாக நடிக்க இருக்கும் முதல் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். traident மீடியா தயாரிக்கும் இந்த படத்தில் குக்கு வித் கோமாளி புகழும் நடிக்க இருக்கிறார் என்பது டபுள் போனஸ்.

அதே போல அஸ்வின் ‘லோனர்’ என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி 10 ஆம் தேதி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.அப்போது அஸ்வின் பற்றி சிவகார்த்திகேயன் பேசிய போது, 2011 ஆம் ஆண்டு ஆண்டு நான் வீட்டை விட்டு வந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று முயற்சித்தேன். அப்போது ஒருவரை நம்பி நான் ஏமாந்து அமர்ந்த போது நான் சந்தித்த முதல் பிரபலம் நீங்கள் தான். உங்களிடம் நான் சினிமாவில் நுழைய நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட போது ட்விட்டரில் அணைத்து இயக்குனர்களையும் பின் தொடர்ந்து அதன் மூலமாக அவரை அணுகுங்கள் என்று சொன்னீர்கள். அந்த பயணம் தான் என்னை இங்கே கொண்டு வந்துள்ளது என்று கூறினார் அஸ்வின். .

-விளம்பரம்-
Advertisement