இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் காக்க காக்க. இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் காக்க காக்க படத்தில் சூர்யா- ஜோதிகா உடைய புகைப்படத்தை பகிர்ந்து அஸ்வின்- சிவாங்கி புகைப்படத்தையும் சேர்த்து சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது இந்த புகைபடங்கள் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் மக்கள் மத்தியில் படு ஃபேமஸான நிகழ்ச்சிகளில் சிலவற்றை சொல்லலாம். அதில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் அஸ்வின்- சிவாங்கி. விஜய் டிவியில் இதற்கு முன்பே அஸ்வின் அவர்கள் ரெட்டை வால் குருவி, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.
அஸ்வின் நடித்த படங்கள்:
அதேபோல் இவர் ஓ காதல் கண்மணி, ஆதித்யா வர்மா போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இவர் செல்லமே என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி தான். அதேபோல் சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.
அஸ்வின்- சிவாங்கி காம்போ:
மேலும், சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் வந்திருந்தாலும் இரண்டாவது சீசன் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படை உருவானது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வின்- சிவாங்கி உடைய காம்போ வேற லெவல் என்றே சொல்லலாம். இவர்கள் இருவருக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் கும்பல் இருந்தது. அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி எல்லாம் வேற லெவல் இருந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு அஸ்வினியும், சிவாங்கியும் பல பேட்டிகள், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் இருந்தார்கள்.
அஸ்வின் புது படம்:
அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அஸ்வின் ஆல்பம் சாங், வெப் சீரிஸ் என்று பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அஸ்வின் என்ன சொல்லப்போகிறார் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா எல்லாம் முடிவடைந்தது. அதேபோல் சிவாங்கியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் பாடி வருகிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் புது படத்தில் சிவாங்கி நடித்தும் இருக்கிறார். இப்படி இருவரும் பிஸியாக இருக்கின்ற வேளையில் இவர்கள் குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
அஸ்வின்-சிவாங்கி காக்க காக்க புகைப்படம்:
அது என்னவென்றால், காக்க காக்க படத்தில் சூர்யா- ஜோதிகா உடைய புகைப்படத்தை பதிவிட்டு சூர்யா போல அஸ்வினுடைய புகைப்படத்தையும், ஜோதிகா போல சிவாங்கி உடைய புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார்கள். இதை பார்த்த ரசிகர்கள் இனிமேல் காக்க காக்க படத்தை பார்த்தால் இவர்களுடைய ஞாபகம் தான் வரும். வேற வேலை இல்லையாடா? இன்னும் எவ்ளோடா இந்த படத்தை விமர்சனம் செய்வீர்கள் என்று மீம்ஸ்களை போட்டு வருகிறார்கள்.