விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் அஸ்வினும் ஒருவர். இந்த சீசனில் பலரது பெண்கள் மனதையும் கவர்ந்தவர் அஸ்வின் தான்.
அஸ்வின், விஜய் டீவிக்கு புதிதானவர் அல்ல, இவர் கடந்த 2015 ஆம் ஆண்டே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டை வால் குருவி’ என்ற சீரியலில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. ஜூனில் துவங்கிய இந்த சீரியல் அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது. இந்த சீரியல் மொத்தம் 100 எபிசோடுகள் மட்டும் தான் ஒளிபரப்பானது.இந்த சீரியலை தொடர்ந்து அஸ்வின் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நினைக்கத் தெரிந்த மனமே என்ற சீரியலில் நடித்தார்.
இதையும் பாருங்க : மறைந்த தன் தந்தை போட்டோ முன் விளையாடும் சிரஞ்சீவியின் குழந்தை – உருக்கமான வீடியோ.
இந்த சீசனில் முதல் இடத்தை கனியும், இரண்டாம் இடத்தைஅஸ்வினும் , மூன்றாம் இடத்தை ஷகீலாவும் வென்றுள்ளனர். இனி அஸ்வினை பார்க்க முடியாதா என்று பல பெண் ரசிகைகள் ஏங்கி கொண்டு இருக்க அஸ்வின் தான் ஹீரோவாக நடிக்க இருக்கும் முதல் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். traident மீடியா தயாரிக்கும் இந்த படத்தில் குக்கு வித் கோமாளி புகழும் நடிக்க இருக்கிறார் என்பது டபுள் போனஸ்.
அதே போல அஸ்வின் ‘லோனர்’ என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து ரெட் ஜெயிண்ட் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா இயக்கத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்க இருந்தது. இப்படி ஒரு நிலையில் அஸ்வினுக்கு அந்த வாய்ப்பு பறிபோய்யுள்ளது. அஸ்வினுக்கு பதில் பிரபல மலையாள நடிகர் ஜெய்ராமின் மகன் காளிதாஸ் இந்த படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளாராம். நடிகர் காளிதாஸ் நடிப்பில் வெளியான ‘தங்கம்’ பாவக் கதை, அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை ஏற்ப்படுத்தி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.