அவரு ஒன்னும் இல்லாத காலத்தில் அவர ஹீரோவா வச்சி படம் பண்ணேன். ஆனா அவரு – அஸ்வினின் முதல் பட இயக்குனர் வேதனை.

0
683
aswin
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இதற்கு முன் இவர் ஷார்ட் பிலிம், ஆல்பம் சாங் என நடித்து இருந்தாலும் இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைத் தொடர்ந்து இவர் தற்போது ஹரி இயக்கத்தில் ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த இந்த படத்தின் ஆடியோ விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பலரும் பலவிதமாக தங்களுடைய கருத்துகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்தநிலையில் இது குறித்து அஸ்வினின் முதல் பட இயக்குனர் அருண் காந்த் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, அஸ்வின் நடித்த முதல் படம் இந்த நிலைமாறும். இந்த படம் 2020 இல் வெளிவந்தது. நாங்க நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சின்ன பட்ஜெட்டில் எடுத்த படம் தான் இது. இந்த படம் அஸ்வின் பிரபலமாவதற்கு முன்னரே அவரை கதாநாயகனாக நடிக்க வைத்தோம். சின்ன பட்ஜெட் படம் என்பதால் ரொம்ப பெரிய அளவில் படத்தின் புரமோட் பண்ண முடியவில்லை. அது மட்டுமில்லாமல் அஸ்வின் அப்போது மார்க்கெட்டில் இல்லை.

- Advertisement -

அவருக்கு அவ்வளவு செலவு பண்ணி புரமோட் பண்ண முடியாது. அந்த அளவுக்கு என்கிட்ட பட்ஜெட்டும் இல்லை. இதனால் தான் நாங்கள் அந்த படத்தை புரமோட் பண்ணவில்லை. ஆனால், அவர் எப்படி என்னுடைய படத்தில் நடிக்கலை என்று சொல்லமுடியும்? இதற்கெல்லாம் காரணம் பெரிய படங்களில் நடித்ததனால் தான் இப்படி செய்கிறார்? மேலும், அவர் பிரபலமாவதற்கு முன்னாடியே அவரை சப்போர்ட் பண்ணி அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். ஷார்ட் பிலிம், இன்டிபென்டன்ட் பிலிம் மூலமா எப்படி படம் எடுக்க கூடாதுன்னு கத்துகிட்டேன் என்று அவர் சொல்வதெல்லாம் தவறான விஷயம். இதுவரை நான் அவரைப்பற்றி எங்கேயும் ஒரு வார்த்தை கூட தவறாக பேசியதில்லை.

Indha Nilai Maarum – Tamil Trailer – faceofcinema

ஆனால், அவர் என்னை பேச வைக்கிறார். அவர் நடித்த முதல் படம் சத்யம் தியேட்டரில் பதினோரு நாட்கள் ஓடி இருந்தது. அந்த படத்தை பார்த்தவர்களுக்கு உண்மை என்னவென்று தெரியும். அது மட்டுமில்லாமல் டுவிட்டரில் பல பேர் என்னை டேக் பண்ணி அஸ்வின் நடித்த முதல் படத்தை பற்றி கேட்டிருக்கிறார்கள். ஆனால், இதுகுறித்து அஸ்வினிடம் தான் கேட்கணும். அதோடு இது பற்றி அவர் ஏன் சொல்லவில்லை? என்று அவருக்கு தான் தெரியும். மேலும், இந்த படம் இந்தியாவிற்கு வெளியே அமேசான் ஒடிடியில் ரிலீஸ் ஆயிருக்கு. சீக்கிரமாகவே இந்த படத்தை நாங்கள் ரீ-ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் இந்தியாவிற்கு உள்ளேயும் ஒடிடியில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.

-விளம்பரம்-
இயக்குநர் அருண்காந்த்

அப்படி படம் வெளியாகும்போது இது உங்க முதல் படம் தானே என்று கேட்பவர்களுக்கு அஸ்வின் என்ன பதில் சொல்லப்போகிறார்? என்று நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அதே மாதிரி எனக்கு படம் பிடிக்கவில்லை என்றால் அதை ரிலீஸ் பண்ண விடமாட்டேன் என்று அஸ்வின் சொல்லிருந்தார். இதையெல்லாம் எப்படி அவர் சொல்ல முடியும்? ஒரு படம் ரிலீஸ் பண்ணனுமா, வேண்டாமா என்பது தயாரிப்பாளரும், டைரக்டரும் தான் முடிவு செய்யனும். இது ரொம்பத் தவறான விஷயம். அதுமட்டுமில்லாமல் அவர் ஃபேமஸ் ஆகுவதற்கு முன்னாடியே நட்பின் காரணமாக பலரும் அவருக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள். ஆனால், அவர்களுக்கான ஒரு அங்கீகாரத்தை கூட அஸ்வின் கொடுக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement