விஜய் டிவியின் ஆபீஸ் தொடரில் நடித்துள்ள அஸ்வின் – அதுவும் எந்த சீசனில் பாருங்க

0
5170
aswin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் அஸ்வினும் ஒருவர். இந்த சீசனில் பலரது பெண்கள் மனதையும் கவர்ந்தவர் அஸ்வின் தான்.

-விளம்பரம்-

அஸ்வின், விஜய் டீவிக்கு புதிதானவர் அல்ல, இவர் கடந்த 2015 ஆம் ஆண்டே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டை வால் குருவி’ என்ற சீரியலில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. ஜூனில் துவங்கிய இந்த சீரியல் அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது. இந்த சீரியல் மொத்தம் 100 எபிசோடுகள் மட்டும் தான் ஒளிபரப்பானது.இந்த சீரியலை தொடர்ந்து அஸ்வின் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நினைக்கத் தெரிந்த மனமே என்ற சீரியலில் நடித்தார்.

- Advertisement -

அதே போல இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓகே கண்மணி’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடரிலும் நடித்துள்ளார். அதே போல விக்ரம் மகன் துருவ், நாயகனாக அறிமுகமான ‘ஆதித்யா வர்மா’ படத்தில் துருவ் விக்ரமின் அண்ணனாக நடித்து இருந்தார் அஸ்வின். ஆனால், இதுபற்றி அவர் பெரிதாக வெளியில் கூட சொல்லவில்லை. இப்படி ஒரு நிலையில் அந்த படத்தில் தான் தான் ஹீரோவாக பண்ண வேண்டியது என்று கூறியுள்ளார் அஸ்வின்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசுகையில், நான் பல ஆண்டுகளாக ஹீரோவாக ஆகா ட்ரை பண்ணேன். ஆனால், எனக்கு தொடர்ந்து சிறு சிறு ரோல் தான் கிடைத்தது. இப்படி ஒரு நிலையில் தான் நான் நடிக்க வேண்டும் என்று ஆசைபட்ட ரீ – மேக் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. நானும் நான் தான் ஹீரோ என்று போனேன். ஆனால், அங்கே போனதும் எனக்கு ஒரு மொக்க ரோல கொடுத்தாங்க நானும் நடிச்சிட்டேன். அந்த படமும் வெளியாகிடிச்சி. அந்த படம் பாக்கும் போதெல்லாம் ‘நான் ஹீரோவா நடிக்க வேண்டிய படம்’னு எனக்கு இப்பவும் தோணும் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement