ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து கெட்ட வார்த்தையை பதிவிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்.

0
848
aswin
- Advertisement -

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அஸ்வின் போஸ்ட். பங்கமாக கலாய்த்து வரும் நெட்டிசன்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் ஆல்பம் பாடல்கள், வெப் சீரிஸ் என்று நடித்து வருகிறார். ஆனால், இதற்கு முன்னாடி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்துளளார். அதே போல ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போல போன்ற படங்களில் சிறு ரோலில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-
aswin

இப்படி 10 ஆண்டுகளாக சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று போராடி வருகிறார் அஸ்வின். இருந்தும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தான் அஸ்வின் மிக பிரபலமானார். மேலும், இந்த சீசனில் பலரது பெண்கள் மனதையும் கவர்ந்தார் அஸ்வின். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல ஆல்பம் பாடல்களில் அஸ்வின் நடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘ஓ மனப்பெண்ணே’ படத்தில் செகண்ட் ஹீரோவாக அஸ்வின் நடித்து இருந்தார்.

- Advertisement -

என்ன சொல்ல போகிறாய் படம்:

இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் ஹீரோவாக அஸ்வின் நடித்து இருக்கிறார். இயக்குனர் ஹரிஹரன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா, குக் வித் கோமாளி புகழ் என்று பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அஸ்வின் பேசியது நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டது. இந்த பட விழாவில், எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க.

பட விழாவில் அஸ்வின் பேசியது:

கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கிவிடுவேன். இதுவரை நான் கேட்ட 40 கதைகளில் நான் தூங்கி விட்டேன். ஆனால், நான் கேட்ட கதைகளில் தூங்காத ஒரு கதை தான் என்ன சொல்ல போகிறாய். அந்த கதை பிடித்துப்போய் நான் நடிக்க ஓகே சொல்லிவிட்டேன் என்று பேசி இருந்தார். இப்படி இவரை பேசியதை கேட்டு பலரும் விமர்சித்து இருந்தார்கள். இதுகுறித்து அஸ்வினும் மன்னிப்பு கேட்டு விளக்கம் கொடுத்து இருந்தார். பின் பல சர்ச்சைகளுக்கு பின் இந்த படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

அஸ்வின் பட விமர்சனம்:

ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இவருடைய பேச்சை கேட்டு பலரும் கோபமடைந்து இருந்ததே இதற்கு காரணம் என்றும் கூறி இருந்தார்கள். மேலும், எதிர்பார்த்த அளவிற்கு படம் வெற்றியடையவில்லை என்றாலும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் அஸ்வின் இன்ஸ்டகிராமில் போஸ்ட் ஒன்று போட்டு இருந்தார். தற்போது அது பயங்கர சர்ச்சையை கிளப்பியுள்ளது. அப்படி என்ன போஸ்ட் போட்டு இருக்கிறார் என்றால், பழி வாங்குவதற்கு எனக்கு மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது.

aswin

அஸ்வின் இன்ஸ்டகிராம் போஸ்ட்”:

எதுவாக இருந்தாலும் கர்மா பார்த்துக் கொள்ளும் என்பதை சொல்லும் வகையில் அஸ்வின் பதிவு போட்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் சும்மா விடுவார்களா? எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல அஸ்வினின் போஸ்ட் ஆகிவிட்டது. மேலும், வெளியான படம் சரியாக ஓடவில்லை, அடுத்த படம் வருமா? என்று தெரியவில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் இதெல்லாம் தேவையா? என்று ரசிகர்கள் மீண்டும் அஸ்வினை தாளித்து வருகிறார்கள். தற்போது அஸ்வினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் மீம்ஸ் தான் சோசியல் மீடியாவில் உலா வருகிறது.

Advertisement