ஜகமே தந்திரம் டீஸர்ல பாபா பாஸ்கர நோட் பன்னீங்களா ? வேற லெவல்ல குத்து இருக்கும் போல இந்த பாட்ல.

0
946
baba
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல நடன இயக்குனர்கள் படங்களையும் இயக்கியுள்ளனர். பிரபு தேவா, ராஜு சுந்தரம், ராபர்ட் என்று பலர் டான்ஸ் மாஸ்டர் என்பதை தாண்டி படங்களையும் இயக்கியுள்னர். அந்த வகையில் தற்போது குக்கு கோமாளி நிகழ்ச்சியில் அசத்தி வரும் பாபா பாஸ்கர் மாஸ்டரும் ‘குப்பத்து ராஜா ‘படத்தை இயக்கி இருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது.

-விளம்பரம்-

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சீசனில் கோமாளிக்கு இணையாக படு பயங்கர காமெடி செய்து வருகிறார் பாபா பாஸ்கர் . பாபா பாஸ்கர் தமிழிலில், 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் பொல்லாதவன், வில்லு, வேட்டைக்காரன், சிறுத்தை, மாரி என்று பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இதையும் பாருங்க : செல்வராகவனின் முதல் மகனா இது – எப்படி வளந்துட்டாரு. அப்படியே யார மாதிரி இருக்கார் பாருங்களேன்.

- Advertisement -

பாபா பாஸ்கர், தனுஷ் படத்தின் மூலம் தான் நடன இயக்குனராக அறிமுகமானார் என்பதால் இவர் பெரும்பாலான தனுஷ் படங்களில் பணியாற்றி விடுவார். அந்த வகையில் விரைவில் வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் படத்திலும் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் முக்கியமானப் படம் `ஜகமே தந்திரம்’. ரசிகர்கள் மத்தியில் இந்தப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரகிட்ட ரகிட்ட ‘ பாடல் பெரும் வைரலானது. இந்த பாடலுக்கு பாபா பாஸ்கர் மற்றும் ஷெரிப் தான் நடன இயக்குனர்களாக பணியாற்றி இருக்கின்றனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீஸரரில் இடம்பெற்ற இந்த பாடலின் காட்சியில் பாபா பாஸ்கரை நீங்கள் நோட் செய்யலாம்.

-விளம்பரம்-
Advertisement