10 ஆம் வகுப்பு தேர்வில் டாப் 3யில் வந்துள்ள பாலா – பள்ளியே வைத்துள்ள பேனர். எவ்ளோ மார்க் வாங்கி இருக்கார் பாருங்க.

0
1317
bala
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தீனா, கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த கைதி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதை தொடர்ந்து பல படங்களில் நடித்தார் தீனா. இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

தீனாவை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் காமெடியில் கலக்கி வருவது புகழ் மற்றும் பாலா தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவரை அனைவரும் வெட்டுக்கிளி என்று தான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர். தீனா எப்படி பிராங்க் கால் மூலம் பிரபலமானரோ அதே போல பாலா மற்றவர்களை கலாய்ப்பதின் மூலம் பிரபலமானார்.

இதையும் பாருங்க : கருப்பா இருக்க, குண்டா இருக்கனு கேலி பண்றாங்க – வருத்தத்தோடு பிரியா மணி சொன்ன விளக்கம்.

- Advertisement -

அதே போல இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட கோமாளியாக பங்கு பெற்று அசத்தி இருந்தார். தற்போது புகழ் மற்றும் பாலா இருவருமே சினிமாவில் நடித்து வருகிறார்கள். புகழை போல பாலாவும் பல கஷ்டங்களை கடந்து வந்தவர் தான். சமீபத்தில் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசிய பாலா, பாலா பேசுகையில் ”எங்களை மாதிரி பசங்க எல்லாம் எடுத்த உடனே மேல வந்திற முடியாது. பெர்பார்ம பண்ணும் போது சுட சுட டீயெல்லாம் எடுத்து மேல ஊத்தி இருக்காங்கஎன்று கண்ணீர் மல்க கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் பாலா 10 ஆம் வகுப்பு தேர்வில் பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்ததற்காக பள்ளி சார்பாக வைத்த பேனரில் பாலாவின் புகைப்படம் இடம்பெற்று உள்ளது. அந்த பேனரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதுவும் 10 ஆம் வகுப்பில் பாலா வாங்கிய மதிப்பேன் எவ்வளவு தெரியுமா ? 500 க்கு 490 மதிப்பெண்கள்.

-விளம்பரம்-
Advertisement