‘இவரை தூக்கிட்டு தங்கதுரை,மதுரை முத்துவ போடுங்க’ – முதல் வாரத்திலேயே பலரின் வெறுப்பை சம்பாதித்த கோமாளி.

0
827
cooku
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. மேலும், இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு உள்ளார்கள்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனில் இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. மேலும், குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி உள்ளது. இதில் குக்குகளாக- அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப் என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

நிகழ்ச்சியில் உள்ள கோமாளிகள்:

இந்த நிகழ்ச்சியில் பிரபலமான கோமாளிகளாக சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா இருகிர்ரகள். இவர்கள் வழக்கம் போல் தங்களுடைய கோமாளித்தனத்தை அழகாக செய்தீர்கள். இவர்களை தொடர்ந்து இந்த சீசனில் புதிதாக பல பேர் கோமாளிகளாக வந்திருக்கிறார்கள். இது ஆடியன்ஸ் பலருக்கு பிடிக்கவில்லை என்று சொல்லலாம். அதிலும் கோமாளியாக சூப்பர் சிங்கர் பரத் வந்திருக்கிறார். இவர் கடந்த ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீனியர் என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தில் பிரபலமானார்.

நிகழ்ச்சியில் பரத் செய்த வேலை:

இதற்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக உள்ளார். நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலேயே இவர் நடுவர்களை மாமா என்று அழைத்ததும், சக போட்டியாளர்களுடன் நகைச்சுவை பண்ணுகிறேன் என்று கடுப்பு ஏற்றியதும் பலருக்கு பிடிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் இவர் புகழ் மாதிரி பெயரை எடுக்க வேண்டும் என்று பெண்களிடம் வழிந்து பேசுவது, மற்ற போட்டியாளர்களை கிண்டல் செய்வது என்று தேவை இல்லாத வேலையை செய்து இருக்கிறார். இது ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்றியது.

-விளம்பரம்-

பரத்தை கழுவி ஊற்றிய ரசிகர்கள்:

இந்நிலையில் பரத்தை குறித்து பலரும் விமர்சித்து சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதோடு நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து முடியும் வரை பரத் செய்த எல்லா வேலைகளும் கடுப்பேற்றியது தவிர கோமாளி தனமாக இல்லை. இவரை ஏன் கோமாளியாக போட்டீர்கள்? தயவு செய்து பரத்தை நீக்குங்கள் என்று ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் சிலர் பரத்தை பற்றி திட்டி கழுவி கழுவி ஊற்றினார்கள்.

ரசிகர்களின் குமுறல்:

அதுமட்டுமில்லாமல் இந்த சீசனில் சில பேர் மட்டுமே மக்களுக்கு பிடித்தவர்களாக இருக்கிறார்கள். புதிதாக வந்திருக்கும் அனைவரும் பெரிதாக சொல்லும் கொள்ளும் அளவிற்கு இல்லை. கடந்த சீசன்களில் இருந்த மதுரை முத்து, தங்கதுரை, சரத் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தயவு செய்து அவர்களை போடுங்கள் என்றெல்லாம் கமென்ட் போட்டு வருகிறார்கள். தற்போது இந்த பதிவுகள் சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு விஜய் டிவி தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement