ஹாலிவுட்டில் பாலியல் ஆபாச படங்களில் நடித்து பின்னர் திரைப்படங்களில் நடிகையாக மாறியவர் நடிகை சன்னி லியோன். தற்போது ஹிந்தி திரையுலகின் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு டேனியல் வெபர் என்ற கணவர் இருக்கிறார்.ஆபாச நடிகையாக இருந்தாலும் இவரை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். திருமணம் ஆன பின்னர் இரண்டு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், தற்போது தமிழ், மலையாளம் என்று பல படங்களில் நடித்து வருகிறார்.
முன்னர் பார்ன் எனப்படும் நீலப்படங்களில் நடித்து வந்த அவர் பாலிவுட்டில் அறிமுகமாகி தற்போது அங்கு முன்னணி நடிகையாகவும் மாறிவிட்டார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதன் பின்னர் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் அடுத்து ஒரு படத்தில் முன்னணி ரோலில் நடிக்கிறார் சன்னி லியோன்.
இதையும் பாருங்க : நான் 5ஆயிரம் சம்பளம் வாங்கனப்ப சிவாக்கு இவ்ளோ தான் சம்பளம் – ஆனா, இன்னிக்கி அவர் கொடில சம்பளம் வாங்குறாரு.
நடிகை சன்னி லியோன் தமிழில் ஒரு புதிய ஹாரர் காமெடி படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் அவருடன் இணைந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் சதீஷ் நடிக்க இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடிகர் சதீசுக்கு ஜோடியாக குக்கு வித் கோமாளி போட்டியாளரும் சீரியல் நடிகையுமான தர்ஷா குப்தா நடிக்க இருக்கிறார்.
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பாகவே இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்தவர் தர்ஷா. தற்போது சன்னி லியோன் படத்தில் நடிப்பது குறித்து தர்ஷா பதிவிட்ட போஸ்ட்டை பார்த்து ரசிகர்கள் பலரும் சரியான போட்டி தான் என்று பதிவிட்டு வருகின்றனர். அதே போல இந்த படத்தில் பிரபல டிக் டாக் ஸ்டாரான ஜி பி முத்துவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.