விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் இளசுகளை டார்கெட் செய்து உருவாக்கப்பட்ட கனா காணும் காலங்கள் தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்கமுடியாது. 90களில் பிறந்தவர்களுக்கு இந்த தொடர் மிகவும் பிடித்தமான தொடராக இருந்து வந்தது . 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பான இந்த தொடர் அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. கனா காணும் காலங்கள் தொடரைப் போலவே கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற இரு தொடர்களும் மாபெரும் வெற்றி தொடராக அமைந்திருந்தது.
இதையும் பாருங்க : வெறும் போஸ் மட்டும் தான், படம் ஒன்னும் காணும் – கேலி செய்த ரசிகர்கருக்கு சனம் ஷெட்டியின் எமோஷனல் பதில்.
இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர் நடிகைகள் பின்னர் தொலைக்காட்சிகளிலும் வெள்ளித்திரையிலும் நடிகர் நடிகைகளாக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இர்பானும் ஒருவர். இவர் பட்டாளம், எதிர் வீடு, ரூ, பொங்கி எழு மனோகரா போன்ற சில படங்களில் நடித்து வந்தார். இதில் எந்த படமும் அவருக்கு பெரியதாக அமையவில்லை.
இறுதியாக சேரன் இயக்கத்தில் வெளியான ‘ராஜாவுக்கு செக் ‘ படத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இர்பான் சிவகார்த்திகேயன் பற்றி பேசுகையில், அவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது நான் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன். ஒருமுறை ஒரு பேர்பார்மன்ஸ்சிற்காக கோயம்புத்தூர் சென்றிருந்தோம் அந்த நிகழ்ச்சியை ரம்யா தான் தொகுத்து வழங்கி இருந்தார்.
அப்போது நான் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம் பலருக்கும் அறியப்பட்ட ஒரு நபராக இருந்தேன். அவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமாக இருந்தார். எங்களுடைய நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு எனக்கு 5000 ரூபாய் சம்பளம் கிடைத்தது சிவகார்த்திகேயன் அண்ணாவிற்கு நான்காயிரம் ரூபாய் கிடைத்தது. அப்போது நான் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டு இருந்தேன். எப்போது நான் கோடிகளில் சம்பளம் வாங்குவேன் என்று. ஆனால், தற்போது சிவகார்த்திகேயன் அண்ணா கோடியில் சம்பளம் வாங்குகிறார் நான் இன்னமும் அந்த உயரத்தை அடைய வில்லை என்று கூறியுள்ளார் இர்பான்