சிம்புவின் மாநாடு படத்தில் கமிட் ஆன குக்கு வித் கோமாளி பிரபலம் – இவரு வேற லெவல்ல போய்ட்டாருபா.

0
1200
maanadu
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. குக் வித் கோமாளி-யின் நாயகன் என்று சொல்லுமளவுக்கு காமெடி மழை பொழிந்து தள்ளுகிறார் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பிரபலம் பெற்ற கோமாளி என்றால் அது புகழ் தான்.

- Advertisement -

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் புகழுக்கு ஏகப்பட்ட பட வாய்புகள் குவிந்து வருகிறது. சந்தானம் நடித்து வரும் புதிய படம், விஜய் சேதுபதி 46 , ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் அருண் விஜய்யின் படம் என்று பல படங்களில் கமிட் ஆகியுள்ள புகழ் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். சமீபத்தில் இவர் மாநாடு படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி ,மனோஜ் பாரதிராஜா, டேனியல் என்று பல்வேறு நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசரை 7 மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் பணிகள் விரைவில் நிறைவடைய இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement