இந்த நடிகர் என் சித்தப்பா தான். போட்டோ வெளியிட்டு ஷாக் கொடுத்த ரம்யா பாண்டியன். அட முக ஜாடை கூட ஒண்ணா இருக்கே.

0
39975
Ramya-Pandian
- Advertisement -

ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். ரம்யா பாண்டியன் அவர்கள் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலியில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் முதன் முதலில் குறும் படங்களில் தான் நடிக்க தொடங்கினார். குறும் படங்களுக்கு பிறகு தான் இவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. இவர் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஜோக்கர்’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் அவர்கள் தனது டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்து பல ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள். அதில் ரம்யா பாண்டியன் அவர்கள் தனது சித்தப்பா அருண் பாண்டியன் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பதிவிட்டு ஹாண்ட்சம் ஜென்டில்மேன் சித்தப்பா என்று குறிப்பிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ‘அப்போ ரம்யா பாண்டியன் சித்தப்பா தான் அருண் பாண்டியனா!! என்ற ஆச்சரியத்துடன் பலரும் கேட்டு வருகிறார்கள்.

- Advertisement -

இதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டார்கள் என்றே சொல்லலாம். தமிழ் சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் பிரபலமான நடிகராக இருந்தவர் அருண் பாண்டியன். இவர் நிறைய குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக இவர் படங்களில் நடிப்பதை விட்டு படங்களை தயாரித்து வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Keerthi-Pandian - Suryan FM
தனது குடும்பத்தாருடன் அருண் பாண்டியன்

மேலும், நடிகை ரம்யா பாண்டியனின் நடிப்பு எதார்த்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தால் கூட திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார். பட வாய்ப்புகள் கிடைக்காததால் அண்மைக் காலத்தில் இருந்து போட்டோ ஷூட்டில் கவனம் செலுத்தி வந்தார் ரம்யா பாண்டியன். சமீபத்தில் ரம்யா பாண்டியன் புடவையில் இடுப்பு தெரியும் படி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. படங்களில் கிடைக்காத புகழ் இவருக்கு மொட்டை மாடியில் எடுத்த புகைப்படம் மூலம் புகழ் உச்சிக்கு கொண்டு சென்று விட்டது.

-விளம்பரம்-

அன்றிலிருந்து ரம்யா பாண்டியன் புகைப்படங்கள் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் போட்டியாளராக பங்கு பெற்றார். இந்த நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் மற்றும் புகழ் இருவரது காம்பினேஷன் கலக்கலாக இருந்தது. பிறகு அதே சேனலில் ஒரு காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

Advertisement