சூப்பர் சிங்கரில் கிடைக்காத விருதை குக் வித் கோமாளியில் வாங்கிய ஷிவாங்கி.

0
39163
shivangi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்து உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சமையல் நிகழ்ச்சி. விஜய் டிவி இந்த முறை சமையல் நிகழ்ச்சியில் ஒரு புது மாதிரியான அட்ராசிட்டியை கொண்டு வந்து உள்ளது. சமையல் என்றால் மற்ற நிகழ்ச்சிகளை போல அனைவரும் சமையல் தெரிந்து வந்து செய்வது கிடையாது. சமையல் தெரிந்தவர்களுடன் சமையல் செய்ய தெரியாதவர்கள் இணைந்து செய்யும் நிகழ்ச்சி. இதுவரை வந்த சமையல் நிகழ்ச்சியை விட இந்த சமையல் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் விரைவாக பிரபலம் அடைந்தது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

மேலும், சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங்கில் இந்த நிகழ்ச்சி தான் இருந்தது. இந்த ட்ரெண்டிங்கிற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி சுற்றுக்கு வனிதா விஜயகுமார், நடிகை ரேகா, நடிகை ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் என 4 போட்டியாளர்கள் தேர்வு ஆகி இருந்தார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : 40 இல்ல 400 கோடி கேட்டேன். துப்பறிவாளன் 2 வில் இருந்து விலகிய காரணத்தை சொன்ன மிஸ்கின்.

இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக வனிதா விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இரண்டாவது இடத்தை உமா ரியாஸ்கான் பிடித்து உள்ளார். மூன்றாவது இடத்தை ரம்யா பாண்டியன் பிடித்து உள்ளார். பின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில் சூப்பர் சிங்கர் பாடகி ஷிவானிக்கு ‘சிம்மக் குரல் சிங்காரி’ என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை மகிழ்ச்சியுடன் வாங்கிய சிவாணி கண்ணீர் விட்டு அழுது உள்ளார்.

-விளம்பரம்-

அப்போது அதில் அவர் கூறியது, நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பொழுது அனைவரும் என்னை மிமிக்ரி செய்கிறீர்கள், இது உன்னுடைய உண்மையான குரல் இல்லை, நடிக்கிறேன் என்று பலவிதமாக கிண்டல் செய்திருக்கிறார்கள். ஆனால், இது தான் என்னுடைய உண்மையான குரல். இது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. ஆனால், இன்று இந்த குரல் எனக்கு ஒரு விருதினை பெற்றுக் கொடுத்து உள்ளது என்று ஆனந்த கண்ணீருடன் கூறினார். இதனைக் கேட்ட சக போட்டியாளர்களும் கண் கலங்கினார். பின்னர் ஷிவானிக்கு ஆறுதல் கூறி இருந்தனர்.

Advertisement