40 இல்ல 400 கோடி கேட்டேன். துப்பறிவாளன் 2 வில் இருந்து விலகிய காரணத்தை சொன்ன மிஸ்கின்.

0
42452
myskin
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஷால். விஷால் நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தில் அனு இம்மானுவேல், வினய், பிரசன்னா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. விஷால்– மிஸ்கின் கூட்டணி வெற்றி அடைந்ததை தொடர்ந்து ‘துப்பறிவாளன் 2’ படம் உருவாகி வருவதாக தகவல் சமீபத்தில் வெளிவந்தது. மேலும், இந்த படத்தை நடிகர் விஷாலே தயாரித்து, நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
அதிக செலவு வைத்ததாக புகார் விஷால் படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கம்

- Advertisement -

இந்த படத்தில் விஷாலுடன் விஷாலுடன் பிரசன்னா, கெளதமி, ரகுமான், அஷ்யாக உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. லண்டனில் 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக 40க்கும் மேற்பட்ட படக்குழுவினருடன் விஷால் லண்டனில் தங்கி இருந்தார். அங்கு படப்பிடிப்பை மிஷ்கின் சரியாக திட்டமிடாததால் அனுமதி பெறுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளதாக விஷால் தரப்பில் குற்றம் எழுந்து உள்ளது. இதை தொடர்ந்து இரண்டு நாட்கள் படிப்பும் நிறுத்தப்பட்டது. இதனால் விஷாலுக்கு 5 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : நடிகைகளுக்கு இணையாக மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட். அசத்தும் ஜெயம் ரவியின் மனைவி.

-விளம்பரம்-

பின் விஷாலுக்கும்,இயக்குனர் மிஸ்கினுக்கும் இடையே வாக்குவாதம் மோதல் உருவாகி உள்ளது. இதை அடுத்து நடிகர் விஷால் ஒரு வார படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னைக்கு திரும்பி விட்டார். இந்த நிலையில் மிஸ்கின் தரப்பில் துப்பறிவாளன் படத்துக்கு 40 கோடி செலவாகும் என்று ஒரு புதிய பட்ஜெட் கணக்கை விஷாலிடம் ஒப்படைத்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் மிஷ்கின் சம்பளத்தையும் அதிகமாக விஷால் இடம் கேட்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Image result for thuparivalan 2

இதனால் விஷால் மிகவும் கோபம் அடைந்து உள்ளார் என்றும், உடனடியாக விஷால், மிஷ்கினுடன் சண்டை போட்டு துப்பறிவாளன் படத்திலிருந்து இயக்குனர் மிஷ்கினை அதிரடியாக நீக்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், படத்தின் மீதி காட்சிகளையெல்லாம் விஷால் இயக்க முடிவு செய்து உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளதால் தமிழ் சினிமா உலகில் மற்றும் துப்பறிவாளன் படக்குழுவினருக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பிரபல பத்திரிக்கையில் மிஸ்கின் பேட்டி அளித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் , மிஸ்கின் 40 கோடியைக் கேட்கவில்லை, ஆனால் 400 கோடியைக்கேட்டார் என்றும் , மேலும் 100 கோடியில் 50% திரைப்படத்தை முடித்த பிறகு, மீதமுள்ள திரைப்படத்திற்கு 100 கோடி அதிகம் வேண்டும் என்று அவர் கேட்டதாகவும் , மேலும் க்ளைமாக் காட்சியில் விஷால் செயற்கைக்கோளில் இருந்து குதிப்பார் அதற்காக 100 கோடி வேண்டும் என்றுவிரும்பியதாவும் , எனவே துப்பரிவலன் 2 க்கு 400 கோடிகேட்டதாகவும் மிஸ்கின் கேலியாக கூறியுள்ளாராம்.

Advertisement