அட, குக்கு வித் கோமாளி வெங்கடேஷ் பத்திற்கு இவ்ளோ பெரிய மகளா – வெளியான புகைப்படம்.

0
323
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மட்டும் தான் மக்கள் மனதை விட்டு நீங்காமல் இடம் பிடிக்கும். அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். பட்டிதொட்டியெங்கும் இந்த நிகழ்ச்சி பேமஸ் என்று சொல்லலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. இதில் சமையல் மட்டும் இல்லாமல் காமெடி, என்டர்டைமெண்ட் என அனைத்து அம்சங்களையும் கொண்ட நிகழ்ச்சியாக உள்ளது.

-விளம்பரம்-

சமையல் நிகழ்ச்சியில் கோமாளி வைத்து சமையல் செய்யலாம் என்ற வித்தியாசமான கான்செப்ட்டை விஜய் டிவி தான் முதல் முறையாக அறிமுகம் செய்தது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே சோசியல் மீடியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், குத் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். முதல் சீசனை விட இரண்டாவது சீசன் வேற லெவல்ல தெறிக்க விட்டது. இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்தவர்கள் சமையல் கலை வல்லுநர் செப் தாமு, வெங்கடேஷ் பட் ஆவர்.

- Advertisement -

இந்நிலையில் வெங்கடேஷ் பட் அவர்களின் மகளின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு முன் வெங்கடேஷ் பட் அவர்களை பற்றி பலருக்கும் தெரியாது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் வெங்கடேஷ் பட் மிகப் பிரபலமானார் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் தமிழக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை இந்த நிகழ்ச்சி மூலம் தான் வெங்கடேஷ் பட் உருவாக்கினார். தமிழில் குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் முடிவடைந்ததைத் தொடர்ந்து கன்னடத்திலும் இந்த நிகழ்ச்சியில் நடுவராக வெங்கடேஷ் பட் இருந்து வருகிறார்.

ரசிகர்கள் அனைவரும் தமிழில் மூன்றாவது சீசன் எப்போது தொடங்க இருக்கிறது என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் வெங்கடேஷ் பட் அவர்களின் மகளின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், வெங்கடேஷ் பட் அவர்களின் மகளுக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்தது. அதனை வெங்கடேஷ் பட் அவர்கள் தனது குடும்பத்துடன் மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் வெங்கடேஷ் பட்டுக்கு இவ்வளவு அழகான மகள் உள்ளாரா! என்று கமெண்டுகளை போட்டும், புகைப்படத்தை லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement