விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது.
அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்ப தொடங்கி விட்டனர். இந்நிலையில் கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசன் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
ஏனெற்றால் கடந்த குக் வித் கோமாளி சீசன் 3 மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்ததை அடுத்து அதில் இருந்த புகழ், KPY பாலா, சிவாங்கி போன்றவர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருவதினால் அவர்களுக்கு பதிலாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், சின்னத்திரை நடிகையான ரவீனா தாகா, சுனிதா, மோனிஷா, மணிமேகலை உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், இந்த சீசனில் குக்குகுகளாக ஷெரின், விசித்ரா, அஜித் பட நடிகர் ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் தொடர் ஹீரோ விஜே விஷால், காளையன், மைம் கோபி, நாய் சேகர் இயக்குனர் கிஷோர் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டு இருக்கின்றனர். அதிலும் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீஸனின் குக்காக என்ட்ரி கொடுத்த ஆச்சரியப்பட வைத்தார். இதற்காக தனியாக சிறப்பு கோர்ஸ் எல்லாம் முடித்து வந்துள்ளார்.
இப்படி ஒரு நிலையில் இந்த சீஸனின் முதல் எலிமினேஷன் ரவுண்ட் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் முதலில் வைத்த ரவுண்டில் சிவாங்கி சமையலில் அசத்தி செப் ஆப் தி வீக் பரிசை தட்டி சென்றார். இதனை தொடர்ந்து முதல் ரவுண்டில் சுமாராக சமைத்த காளையன், ஷெரின், கிஷோர் ஆகிய மூவரும் எலிமினேஷன் ரவுண்டிற்கு சென்றானர். இதில் சுமாராக சமைத்த கிஷோர் வெளியேற்றப்பட்டார்.
Very very sad & shocking moment for me , yes I got eliminated in yesterday's episode of #CookWithComali Season 4. Thank you each & everyone who supported me. Even though a short journey, i gained a lot of love & positivity from you all ❤️ @vijaytelevision@DisneyPlusHS pic.twitter.com/10dI2cBzHT
— The Kishore Rajkumar (@KishoreRajkumar) February 13, 2023
இப்படி ஒரு நிலையில் ஷிவாங்கிக்கு பதில் தன்னை வெளியேற்றிவிட்டதாகவும் thumbnail வைத்து யூடுயூப் சேனல் ஒன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. இதற்கு பதில் அளித்த கிஷோர், நான் எந்த பேட்டியையும் கொடுக்கவில்லை. இந்த thumbnail, செய்தி அனைத்தும் பொய். தயவு செய்து இந்த பொய்யான செய்தியை நீக்குங்கள் என்று கூறியுள்ளார்.