என்னது CWC புதிய ஜட்ஜ் மாதம்பட்டி ரங்கராஜுக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்காங்களா. இதோ புகைப்படம்.

0
445
- Advertisement -

குக்கு வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கரஜின் குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நான்கு சீசனும் ஒளிபரப்பாகி இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மருந்தாக என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஆண்டு தான் குக் வித் கோமாளியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள். இதனை அடுத்து பலருமே குக் வித் கோமாளி சீசன் 5 இல்லை என்றெல்லாம் கூறி இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகி இருப்பதாக அறிவித்தார்.

- Advertisement -

குக் வித் கோமாளி :

இது ரசிகர்களுக்கு பேர் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதை அடுத்து விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிறுவனம் Media Masons 10. இது தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் தயாரித்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துஇருந்து. இப்படி நிகழ்ச்சியின் இயக்குனர், நடுவர், தயாரிப்பு நிறுவனம் விலகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த தகவல்:

இதனால் இந்த குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடருமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார். இவர் நிகழ்ச்சியில் நடுவராக வருகிறார் என்று சொன்னதிலிருந்து பலர் ஆதரவு தந்தாலும் சிலர் இவர் தகுதியானவரா? என்ற கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தொழில்:

இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை மாதம்பட்டியை சேர்ந்தவர் தான் ரங்கராஜ். இவர் ‘மாதம்பட்டி பாகசாலா’ என்ற பெயரில் கேட்டரிங் தொழிலை நடத்தி வருகிறார். இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருந்தார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார்.இன்னொரு பக்கம் இவர் சமையலிலும் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். இவர் மிகப்பெரிய சமையல் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் கலையில் பயணித்து வருகிறார்.

இவருக்கு சிறுவயதிலிருந்தே சமையலில் பெரிய ஆர்வம். இருந்ததாலும், இவர் பெற்றோருக்காக பொறியியல் பட்டம் பெற்றார். ஆனால், அவருக்கு அதில் விருப்பமில்லை. பின் இவர் தன்னுடைய குடும்பத் தொழிலை 1999 ஆம் ஆண்டு தான் நடத்த தொடங்கினார். முதன் முதலில் இவர் பெங்களூரில் தான் தங்களுடைய உணவகத்தை தொடங்கினார். அதற்கு பின் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் சமைக்க தொடங்கி தற்போது பெரிய நிகழ்ச்சிகளில் செலபிரிட்டியாக இருக்கிறார். நாளுக்கு நாள் இவருடைய கேட்டரிங் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகி வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் முழுவதும் விஐபி வீட்டு விசேஷம் என்றால் இவருடைய சமையல் தான். இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் நடுவராக கலந்து கொள்ள முழுமையான தகுதி பெற்றவர்.

Advertisement