என் படத்தை காப்பி அடித்த தெலுங்கு சினிமாவை பழி வாங்க அப்படி செஞ்சேன், கடைசியில் தொத்துட்டேன். பங்கமாக கலாய்த்த சுந்தர்.சி

0
50
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராகவும்,நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் சுந்தர்.சி. 1995-ஆம் ஆண்டு வெளி வந்த ‘முறை மாமன்’ படத்தினை சுந்தர்.சி இயக்கியிருந்தார். இது தான் சுந்தர்.சி இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பல தமிழ் படங்களை இயக்கினார். மேலும், தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநர் என்பதுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த சுந்தர்.சி, அடுத்ததாக ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார்.

-விளம்பரம்-

இவர் ‘தலைநகரம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோ ஆனார். இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் ‘வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, இருட்டு போன்ற பால் படங்களில் நடித்தார். அதன் பிறகு அவரே இயக்கி நடித்த ‘நகரம் மறுபக்கம், அரண்மனை 1 & 2, 3’ போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது சுந்தர் சி அவர்கள் அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

அரண்மனை 4 படம்:

இதில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, விடிவி கணேஷ், ஜே பி விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை Avni Cinemax சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் Benz அருண்குமார் தயாரித்து இருக்கிறார்கள். மேலும், இதுவரை வந்த மூன்று பாகங்களை விட இந்த படத்தை கொஞ்சம் வித்தியாசமாக இயக்குனர் எடுத்திருக்கிறார்.

சுந்தர் சி பேட்டி:

கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் சுந்தர் சி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அந்த பேட்டியில் நடிகர் பிரசாந்த்தும் கலந்து கொண்டிருந்தார். அப்போது வின்னர் படம் குறித்து தொகுப்பாளர் கேட்டதற்கு சுந்தர் சி கூறியிருப்பது, என்னுடைய ஒரு படத்தை காப்பி அடித்திருந்தால் எனக்கு கோபம் வந்திருக்காது. ஒரு மூன்று படத்தை அப்படியே தெலுங்கில் காப்பி அடித்து இருந்தார்கள். இதனால் எனக்கு இயக்குனர்கள் மீது கோபம் இல்லை.

-விளம்பரம்-

வின்னர் படம் குறித்து சொன்னது:

மொத்த தெலுங்கு சினிமா மீது பயங்கரமான கோபம். நீங்கள் தான் காப்பியடிப்பீர்களா? என்று நானும் நிறைய படங்களுடைய கதையை காப்பி அடித்து எடுக்கப்பட்டது தான் வின்னர் படம். அந்தப் படத்தை அப்படியே எடுக்க முடியாது அல்லவா! சின்ன சின்ன காட்சிகளை மாற்றி தான் எடுத்தோம். அப்படி எடுத்த ஒரு காட்சியில் ஹீரோவை ஹீரோயினி அடி வாங்க வைக்க ஒரு திட்டம் போடுவார். அப்போது ஹீரோ வந்து கொண்டிருக்கும் போது நடுவில் வடிவேலு வந்துட்டேன் என்று ஓடி வருவார். பின் பயங்கரமாக அடிபட்டு கீழே விழுவார். வின்னர் படம் நன்றாக சென்றதுக்கு பிறகு தெலுங்கில் ஒரு படத்தின் டிரைலர் வெளியானது.

வின்னர் படம்:

அப்போது இதே காட்சியை அப்படியே காப்பி எடுத்து வைத்து விட்டார்கள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. யப்பா, உங்கள மாதிரி காப்பி அடிக்க முடியாது. நான் தோற்று விட்டேன் விட்டுடுங்கடா என்று நினைத்தேன் என்று கூறியிருந்தார். சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த வின்னர் படத்தில் பிரபல நடிகர் ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த், கிரண், எம்.என். நம்பியார், விஜய குமார், எம்.என். ராஜம், ரியாஸ் கான், ராஜ் கபூர், அனுராதா, சந்தான பாரதி, சிங்கமுத்து மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

Advertisement