வண்டி ஓட்டும் போது நீங்களே இப்படி பண்ணலாமா? மணிமேகலைக்கு அறிவுரை கூறிய ரசிகர்கள்..

0
4756
- Advertisement -

சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் உள்ளார். பின் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதோடு இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மேலும், தொகுப்பாளினி மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்தார். பின் இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

-விளம்பரம்-

மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பெரிய பிரச்சனையே நடந்தது என்று சொல்லலாம். பின் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

- Advertisement -

ஆனால், இன்னும் இவரது பெற்றோர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளாததால் கொஞ்சம் கவலையில் இருக்கிறார் மணிமேகலை. இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்கள். சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை கோமாளியாக பங்கு பெற்றார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் மணிமேகலை.

இந்நிலையில் தொகுப்பாளினி மணிமேகலை அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி இருக்கிறது. அந்த வீடியோவில் மணிமேகலை பாட்டு பாடிக்கொண்டும், நடனம் ஆடிக் கொண்டும் கார் ஓட்டிச் சென்று உள்ளார். அவருடன் குக் வித் கோமாளி புகழ், பாலா மற்றும் சூப்பர் சிங்கர் சீனியர் இன் போட்டியில் கலந்துகொண்ட நபரும் உள்ளார்கள்.

-விளம்பரம்-

இவர்கள் நாலு பேரும் சேர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு படத்தின் பாடலுக்கு பாட்டு பாடியும், நடனமாடியும் இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். பாதுகாப்பாக வண்டி ஓட்டுங்கள் பல அறிவுரை செய்து வருகிறார்கள்.

Advertisement