ராகுல் தாத்தாவை தொடர்ந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அடுத்த போட்டியாளர் – யார் தெரியுமா ?

0
197
cooku
- Advertisement -

மக்களின் பேவரட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக சென்று கொண்டு இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப்பில் உள்ளது. இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

போட்டியாளர்கள் சீரிசாக சமைத்துக் கொண்டிருக்கும் போது அவர்களுடன் இருக்கும் கோமாளிகள் காமெடி பண்ணுவது, சொதப்புவது போன்ற வேலைகளை செய்வார்கள். அதே சமயத்தில் அவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட வேலையும் செய்வார்கள். சில சமயம் நன்றாக வரும் சமையல் கூட கோமாளிகளால் சொதப்பி விடும், சிலது பிரமாதமாக இருக்கும். இதையெல்லாம் தாண்டி தான் போட்டியாளர்கள் தங்கள் திறமையை காட்ட வேண்டும். இது இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட்.

- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக நிகழ்ச்சியின் நடுவர்களாக இருக்கும் வெங்கடேஷ் பத் மற்றும் தாமு காமெடி செய்கிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார். மூன்று வருடங்களாக இவர்கள் நிகழ்ச்சியின் நடுவர்கள் மற்றும் தொகுப்பாளர் ஆவார். தற்போது இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி:

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த முறை இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக- அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா, அபி, ராகுல், ரோஷினி, வித்யூலேகா, தர்ஷன் என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் கோமாளியாக சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா, குரேஷி, மூக்குத்தி முருகன், பரத்,புகழ் போன்ற பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வழக்கம் போல் தங்களுடைய கோமாளித்தனத்தை அழகாக செய்தீர்கள்.

-விளம்பரம்-

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதலில் வெளியேறியது:

மேலும், இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே விருவிருப்பாகவும், பக்க என்டர்டைன்மென்ட் ஆகவும் சென்றுகொண்டிருக்கின்றது. இருந்தாலும் அப்பப்ப வழக்கமான எலிமினேஷன் முறையும் நடந்து கொண்டு இருக்கிறது. நிகழ்ச்சியில் கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் நிகழ்ச்சியிலிருந்து ராகுல் தாத்தா வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் செலிப்ரேஷன் சுற்று என்பதால் எல்லோருமே செம பன்னாக விளையாடி இருந்தார்கள்.

இரண்டாம் முறை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது:

அதுமட்டும் இல்லாமல் கடந்த வாரம் வைத்த டாஸ்கில் வெற்றி பெற்ற கிரேஸ்,பாலா இருவரும் பிரிட்ஜ் பரிசை தட்டிச் சென்றார்கள். இந்நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேற போகிறார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மனோபாலா வெளியேறி இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மனோபாலா வெளியேறியது குறித்து உங்களுடைய கமெண்டை கீழே சொல்லுங்கள்.

Advertisement