என் கோவிலை இப்படி மாற்றி விடுங்கள் – தனது ரசிகர்களுக்கு ஈஸ்வரன் பட நடிகை வேண்டுகோள்.

0
1119
nidhi
- Advertisement -

என்னதான் நவீன உலகம் பல முன்னேற்றத்தை நோக்கி பயணித்து கொண்டு இருந்தாலும், அன்றும் இன்றும் என்றும் மக்களிடத்தே குறையாதது சினிமா மோகம் தான். பொதுவாக தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் படம் வந்தா கட் அவுட் வைப்பது, அதற்கு பாலபிஷேகம் செய்வது என்று தான் பார்த்திருப்போம். அதிலும் ஒரு சில ரசிகர்கள் ஒரு படி மேலே போய் அலகு குத்திக்கொள்வது, மண் சோறு சாப்பிடுவது, கையில் கற்பூரம் ஏற்றுவது என்று கடவுளுக்கு செய்வதை நடிகர் நடிகைகளுக்கும் செய்யும் வேடிக்கையும் அவ்வப்போது நடந்து தான் வருகிறது. இப்படி ஒரு நிலையில் சிம்புவின் ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வாலுக்கு சென்னையில் ரசிகர்கள் சிலர் கோவில் கட்டி சிலை வைத்துள்ளனர்.

-விளம்பரம்-

நடிகை நித்தி அகர்வால் திரைப் பட நடிகை மட்டும இல்லாமல் டான்சர், மாடலும் ஆவார். இவர் ஹிந்தியில் “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தெலுங்கு மொழியில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து உள்ளார். ஆனால், இந்த படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கும் இந்த படம் வசூல் பெறவில்லை.

இதையும் பாருங்க : உடம்புல தெம்பு இருக்கு, ஆனா ஒருத்தரும் கூப்பிடலையே. நடிக்க ஆசை இருக்கு – ‘நண்பேன்டா’ வாட்ஸ்அப் குழு சந்திப்பில் கண் கலங்கியுள்ள வடிவேலு.

- Advertisement -

தமிழ் நடிகைகளில் குஷ்பூவிற்கு தான் கோவில் கட்டினார்கள், அதன் பின்னர் நயன்தாராவிற்கு கூட கோவில் கட்டி சிலை வைத்தனர். ஆனால், இவர்கள் எல்லாம் பல ஆண்டுகள் பல படங்களில் நடித்து பிரபலமான பின்னர் தான் இதெயெல்லாம் செய்தார்கள் ரசிகர்கள். ஆனால், நிதி அகர்வால் தமிழில் இதுவரை பூமி, ஈஸ்வரன் என்று இரண்டு படத்தில் மட்டும் தான் நடித்தார். அதுவும் இந்த இரண்டு படம் சரியாக ஓடவும் இல்லை என்வது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்க சென்னை காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நிதி அகர்வாலின் தீவிர ரசிகர்கள் சிலர் அவருக்கு சிலை வைத்து, பாலாபிஷேகமும் செய்துள்ளனர். இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது, இதுகுறித்து நிதி அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பை நினைத்து பூரிப்படைகிறேன். எனக்கு எப்போதும் ஆதரவு அளித்திருக்கிறார்கள். எனது ரசிகர்கள் எனக்காக கட்டும் கோவிலை ஆதரவற்றவர்களுக்கு தங்குமிடமாகவும், உணவு கல்வி கொடுக்கும் இடமாகவும் மாற்றிட வேண்டுகிறேன்”

-விளம்பரம்-
Advertisement