விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.
இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் குக்கு வித் கோமாளி சீசன் 1 போட்டியாளர்களான வனிதா, ரம்யா, ரேகா, உமா ரியாஸ் ஆகியோர் வந்திருந்தனர். சீசன் 1-ல் ரம்யா பாண்டியன் இருந்த வரை அவரிடத்தில் தான் ரொமான்ஸ் சேட்டையை செய்து வந்தார். இரண்டாவது சீசனில் அதே பிட்டை தர்ஷா மற்றும் பவித்ராவிடம் போட்டு வந்தார் புகழ். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பவித்ரா வெளியேறி இருந்தார்.
அப்போது பேசிய அவர், இந்த புகழுக்கு காரணம் புகழ் தான். ஆரம்பத்தில் என்னை யார் என்று பலருக்கும் தெரியாது. முதல் முறையாக நான் புகழுடன் சேர்ந்து சமைத்த போது ‘புகழுடன் சமைச்சவங்க இவங்க தான்’னு சொன்னாங்க.அப்புறம் தான் எனக்கு பவித்ரா என்ற பெயர் கிடைத்தது என்று கூறினார். அதற்கு கலங்கிய புகழ் ‘யாரும் இப்படி எல்லாம் சொல்ல மாட்டாங்க, அந்த நல்ல மனசுக்கே நீங்கள் நல்லா வருவீங்க’ என்று கூறினார்.
இப்படி ஒரு நிலையில் புகழுக்கு, தனியார் நிறுவனம் ஒன்று விருது ஒன்றை வழங்கி இருந்தது. அந்த விருதை பெற்ற புகழ், நான் இன்று இந்த அளவிற்கு இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் லேடி கெட்டப் தான். அதை இப்போதும் போட தயங்கமாட்டேன் என்று கூறி இருந்தார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பவித்ரா, நீ அப்போதும் ஹீரோ தான் டார்லிங். உன் கடின உழைப்பு உன்னை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று பதிவிட்டுள்ளார்.