‘பிரண்டுனு சொன்னாங்க’ – இவருடன் இப்படி திருமண கோலத்தில் இருக்காங்களே. பவித்ராவின் புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

0
5792
pavithra
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற 4 வது இறுதி போட்டியாளருக்கான வைல்டு கார்டு போட்டியில் ஒருவர் தான் பைனலுக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஷகீலா மற்றும் பவித்ரா ஆகிய இருவர் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த வாரம் இறுதி போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் செலிப்ரேஷன் வீக் கொண்டாடபட்டு வருகிறது. இதில் பவித்ரா ஒரு இளம் நபருடன் வந்ததை பார்த்து புகேழே ஷாக்கானார்.

- Advertisement -

மேலும், பலரும் இவர் தான் பவித்ராவின் காதலரா என்று வினாவி வந்தனர், இப்படி ஒரு நிலையில் அந்த நபர் யார் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பவித்ரா. அதில் ‘என் குடும்ப நபர்கள் யாரும் இந்த வாரம் சென்னையில் இல்லை. ஆனால், என்னுடன் வந்து என்ன ஆதரித்த இவர் யாரும் இல்லை என் நண்பர் தான். நன்றி மா, எனக்கு சமைக்க தெரிஞ்ச ஒரே பிரண்ட் நீங்க தான். என்னுடைய அகில உலா சூப்பர் ஸ்டார்’ என்று பதிவிட்டுள்ளார்.இந்த நிலையில் பவித்ரா மற்றும் சுதர்சனும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுதர்ஷன், பவித்ராவும் நானும் ஒரு சில விளம்பரங்களில் ஒன்றாக நடித்துள்ளோம். அது போக நானும் அவரும் நல்ல நண்பர்கள். எங்களை பற்றி தெரிந்தவர்களுக்கு எங்களை பற்றி நன்றாக தெரியும் ஆனால், ப்ரோமோவை மட்டும் பார்த்து விட்டு ஒரு சிலர் புகழுக்கும் பவித்ராவுக்கு நடுவில் நான் வந்துவிட்டது போல திட்றாங்க, அதிலும் புகழ் ரசிகர்கள் தான் உண்மை என்னவென்று புரியாமல் பேசுகிறார்கள்.அவர்களுக்கு முழு எபிசோட் பார்த்தால் புரியும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement