பிகில் பட தயாரிப்பாளர் படத்தில் பவித்ரா – அதுவும் யாருக்கு ஜோடியா பாருங்க.

0
1148
pavithra
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

சொல்லப்போனால் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. இந்த சீசனில் கலந்து கொண்ட ஷிவாங்கி, புகழ், தர்ஷா குத்பா, புகழ் பாலா என்று பலருக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதில் புகழ் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர்.

- Advertisement -

அதில் பவித்ராவும் ஒருவர். நடிகை பவித்ரா லட்சுமி ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக மீடியா துறைக்கு அறிமுகமானார். மேலும் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமல்லாமல் இவர் இரட்டை வால் குருவி என்ற சீரியலிலும் நடித்து இருக்கிறார்.

May be an image of 12 people, people standing and indoor

இது சீரியலில் தான் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் அஸ்வினும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இவருக்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த AGS நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக பிரபல காமெடி நடிகர் சதிஷ் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

-விளம்பரம்-

Advertisement