குக்கு வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் – இந்த கோமாளி கூட சேர்ந்தாலே எலிமினேஷன் தானே.

0
1058
cooku
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.

இதையும் பாருங்க : சிகிச்சை பலனின்றி இறந்த பேராண்மை இயக்குனர் ஜனநாதன் – ஜெயம் ரவியின் உருக்கமான பதிவு.

- Advertisement -

இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா ரித்திகாவும் இதுவரை வெளியேறியுள்ளனர். கடந்த சில வாரங்களாக எலிமினேஷன் இல்லாமல் இருந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வாரம் பாபா பாக்ஸர் இம்யூனிட்டி பேண்ட்டை வென்று இருந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்று ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் இருந்து வந்த நிலையில் இந்த அஸ்வின் மற்றும் பவித்ரா எலிமினேஷன் சாலஞ்சில் பங்கேற்றனர்.

இதில் அஸ்வின் காப்பாற்றப்பட்டு பவித்ரா வெளியேறி இருந்தார். பவித்ரா வெளியேறியதை நினைத்து பவித்ராவை விட பாலா தான் சோகத்தில் இருந்தார். ஏனென்றால் இந்த வாரம் பாலாவுடன் தான் பவித்ரா ஜோடி சேர்ந்து சமைத்தார். பொதுவாக எலிமினேஷன் போது பாலாவுடன் சமைத்தாலே அவர்கள் எலிமினேட் ஆகி விடுகிறார்கள். கடந்த இரண்டு சீசனில் பாலாவுடன் சேர்ந்து சமைத்த போது தான், மோகன் வைத்தியா, தாடி பாலாஜி, பிரியங்கா ரோபோ சங்கர், மதுரை முத்து, ரித்திகா, என்று பலர் எலிமினேட் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement