குக்கு வித் கோமாளியில் இருந்து வெளியேறிய பின் பவித்ரா போட்ட முதல் உருக்கமான பதிவு.

0
1445
pavi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

இந்த சீசனில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர். அதே போல வைல்டு கார்ட் போட்டியாளராக ரித்திகா என்ட்ரி கொடுத்து இருந்தார். இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா ரித்திகாவும் இதுவரை வெளியேறியுள்ளனர். கடந்த சில வாரங்களாக எலிமினேஷன் இல்லாமல் இருந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வாரம் பாபா பாக்ஸர் இம்யூனிட்டி பேண்ட்டை வென்று இருந்தார்.

இதையும் பாருங்க : ஷிவானியின் அம்மா பாத்திருப்பீங்க, அவங்க அப்பாவ பாத்திருக்கீங்களா ? இதோ புகைப்படம்.

- Advertisement -

இந்த் நிலையில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்று ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் இருந்து வந்த நிலையில் இந்த அஸ்வின் மற்றும் பவித்ரா எலிமினேஷன் சாலஞ்சில் பங்கேற்றனர்.இதில் அஸ்வின் காப்பாற்றப்பட்டு பவித்ரா வெளியேறி இருந்தார். எலிமினேஷனுக்கு பின் பேசிய பவித்ரா, இந்த புகழுக்கு காரணம் புகழ் தான். ஆரம்பத்தில் என்னை யார் என்று பலருக்கும் தெரியாது. முதல் முறையாக நான் புகழுடன் சேர்ந்து சமைத்த போது ‘புகழுடன் சமைச்சவங்க இவங்க தான்’னு சொன்னாங்க.

அப்புறம் தான் எனக்கு பவித்ரா என்ற பெயர் கிடைத்தது என்று கூறினார். அதற்கு கலங்கிய புகழ் ‘யாரும் இப்படி எல்லாம் சொல்ல மாட்டாங்க, அந்த நல்ல மனசுக்கே நீங்கள் நல்லா வருவீங்க’ என்று கூறினார். இப்படி ஒரு நிலையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பவித்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், இது மிகவும் அற்புதமான ஒரு பயணம் உங்களின் அளவுகடந்த அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி மக்களே.குக்கு வித் கோமாளியில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement