அட கொடுமைய இந்த காரணத்திற்காக மாஸ்டர் படத்தின் வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் புகழ்.

0
46218
pugal

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங்கில் இந்த நிகழ்ச்சி தான் உள்ளது. இந்த ட்ரெண்டிங்கிற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் கோமாளித்தனத்திற்கு அளவே இல்லை. அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. குக் வித் கோமாளி-யின் நாயகன் என்று சொல்லுமளவுக்கு காமெடி மழை பொழிந்து தள்ளுகிறார் புகழ்.

Image result for cooku with comali pugal

இந்நிலையில் 40 நாள் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் நடிக்க வேண்டும் என்று புகழ் இடம் கால்ஷீட் கேட்டு இருந்தார்கள். ஆனால், புகழ் நடிக்க மறுத்து விட்டார். இது குறித்து சமீபத்தில் புகழ் அவர்கள் பேட்டியில் அவர் கூறியிருப்பது, தளபதி படத்தில், அதுவும் லோகேஷ் அண்ணா படத்தில் நடிக்க முடியாமல் போனது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. விஜய் சாரோட படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை,கனவெல்லாம் எனக்கு இருக்கு. கைதி படத்தில் கூட ஒரு கடைசி சீன்லில் நடித்திருப்பேன். ஆனால், அதுல என்னுடைய முகம் தெரியாது. ஏன்னா, நான் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு காரணம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

- Advertisement -

இதையும் பாருங்க : மைனா நந்தினி என்று நினைத்து ஆணுக்கு வந்த தொல்லை. போலீசில் புகார் கொடுத்த சரத்குமார் கட்சி நிர்வாகி.

இந்த நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களிலேயே மக்கள் மத்தியில் நான் பிரபலமாகி விட்டேன். சமூக வலைத்தளங்களிலும் அனைவரும் உங்களுடைய நடிப்பு சூப்பர் என்றும், இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளில் இருந்தும் எனக்கு போன் செய்தும், சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டும் வருகிறார்கள். அந்த அளவிற்கு எனக்கு பெயரை வாங்கி தந்தது இந்த நிகழ்ச்சி தான். நான் எப்போதும் எதுவென்றாலும் முதலில் மாகாபா அண்ணனிடம் தான் அறிவுரை கேட்ப்பேன். அதே போல் மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போது நான் முதலில் மாகாபா அண்ணனிடம் என்ன செய்வது என்று கேட்டேன்.

-விளம்பரம்-

வீடியோவில் 15 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

அவர் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம் அடைய செய்து இருப்பது இந்த நிகழ்ச்சி தான் காரணம். எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவு செய் என்று கூறியிருந்தார். அதனால் தான் நான் எப்ப வேண்டுமானாலும் தளபதி அண்ணா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து சினிமாவிற்கு படம் நடிக்கலாம் என்று தான் நான் போகவில்லை. அதோடு முதலில் முடி வெட்டினனும் என்று சொன்னார்கள்.

முடி வெட்டினால் யாருக்குமே என்னை அடையாளம் தெரியாது. தளபதி படத்தில் நடித்து இருந்தால் கூட இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்க மாட்டேன். நான் நினைத்ததை விட இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நான் இதை எதிர்பார்க்கவில்லை. தற்போது யோகி பாபு உடன் ஒரு படத்தில் நடித்து இருக்கிறேன். மக்கள் எதிர்பார்க்கிற மாதிரி இந்த படம் இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

Advertisement