எங்க போனாலும் தமிழன் தமிழன் தான் – மைதானத்தில் புகழ் செய்த reels , இறுதியில் bulb கொடுத்த நபர். வீடியோ இதோ.

0
377
- Advertisement -

உலக கோப்பை போட்டி ஸ்டேடியத்தில் விஜய் டிவி புகழ் செய்த செயல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். இவர் கடலூரை சேர்ந்தவர். வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு 2008ம் ஆண்டு சென்னைக்கு வேலை தேடி வந்தார். பின்னர் இவர் மேக்கானிக் கடையில் வேலை செய்தாராம். அதன் பின் இவர் தொடர்ந்து பல கடையில் வேலை செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பிறகு 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார். அதற்குப்பின் இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்தவர்கள் வெங்கடேஷ் பத் மற்றும் தாமு. அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனில் மக்கள் இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம்.

- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்:

இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. அந்த வகையில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். இந்த மூன்று சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. சமீபத்தில் அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய் படத்தில் புகழ் நடித்திருந்தார்.

புகழ் நடித்த படங்கள்:

இந்த படத்தை இயக்குனர் ஹரிஹரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா என்று பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து புகழ் அஜித்தின் வலிமை, அருண் விஜயின் யானை போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே புகழ் தான் காதலித்த பெண்ணை கரம் பிடித்தார். தற்போது இவர் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்த வருகிறார்.

-விளம்பரம்-

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி:

அது மட்டும் இல்லாமல் இவர் ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் புகழ் செய்திருக்கும் செயல் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோத இருக்கிறது. இதை நேரில் காண புகழ் சென்றிருக்கிறார். அங்கு மைனாத்தில் அவர் கருப்பு நிற வேட்டி, சட்டையில் சென்று இருக்கிறார்.

வைரலாகும் புகழ் புகைப்படம்:

மேலும், அந்த ஸ்டேடியத்தில் அவர் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை தான் சோசியல் மீடியாவில் பதிவிட்டு, எங்க போனாலும் தமிழன் தான்! கிரிக்கெட்டை நேரில் பாக்குற சுகம் இருக்கே. அதுவும் இந்தியா விளையாடுறத பார்க்கும்போது வேற லெவல் என்றெல்லாம் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவின் இறுதியில் வெளிநாட்டவர் ஒருவர் புகழை பார்த்து எதோ சொல்ல அதை சுட்டி காட்டி நெட்டிசன்கள் பலர் ‘இங்க இதெல்லாம் பண்ண கூடாதுனு சொல்லிட்டானா ‘ என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement