தோளில் கை போட்டு பேசியது, ஊட்டி விட்டது – அஜித், Vjs வுடன் நேர்ந்த அனுபவம் குறித்து புகழ்.

0
197
- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். இவர் கடலூரை சேர்ந்தவர். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார்.அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். கடந்த இரண்டு சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் புகழுக்கு உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது.இவர் சபாபதி என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து இவர் சமீபத்தில் அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய் நடிப்பில் நடித்திருந்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து புகழ் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இறுதியாக அஜித்தின் வலிமை, அருண் விஜயின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் புகழ் நடித்து இருந்தார் புகழ். தற்போது இவர் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்த வருகிறார். இந்த நிலையில் குக் வித் கோமாளி புகழ் சமீபத்தில் ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்திருந்தார் அதில் பெரிய திரை, பெரிய நாடகர்களுடம் நடித்த அனுபவங்களை குறித்து பேசியிருந்தார்.

அவர் கூறுகையில் `உலகில் கொரோனா தொடங்கியது எல்லோருக்கும் கஷ்டமான காலம் தான் ஆனால் அந்த காலம் தான் என்னுடைய நல்ல காலம். கொரோனா தொடங்கி எல்லோரும் வீட்டில் இருக்கும் போது நான் நடித்திருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து என்னை பாராட்டினார்கள். அதன் மூலம்தான் அதிகமான பிரபலமும் கிடைத்து. இயக்குனர் ஹரி தான் என்னை சினிமாவில் யானை படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.

-விளம்பரம்-

அஜித்துடன் வலிமை படத்தில் நடித்திருந்த புகழ் ஒருமுறை அஜித்தை ஏவிஎம் ஸ்டுடியோவில் பார்த்த போது எனக்கு வணக்கம் சூழ் நன்றாக ஒப்பனை செக்கிறீகள் என்று கூறினார். அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தில் அவர் என்னுடைய தோளில் கையை போட்டு இயல்பாக பேசினார் ரொம்ப தங்கமான மனிதர். விஜய் சேதுபதியும் எனக்கு மிகவும் பிடிக்கும், அவருடன் நடிக்கும் போது வரும் காட்சிகளை கலந்துரையாடிய பின்னர்தான் நடிப்போம் அந்த அளவிற்கு நெருக்கம்.

அதோடு படப்பிடிப்பு தலத்தில் இருக்கும் போது உதவியாளர்கள் எனக்கு அதிர்ச்சி கொடுக்கிறோம் சென்று கேரவன் அழைத்து சென்றனர். அங்கு சிவகார்த்திகேயன் இருந்தார் அது என்னால் மறக்க முடியாது. மேலும் சூரி, யோகி பாவு போன்றவர்கள் என்னை எப்போது அன்புடன் தங்கம் செல்லம்னு பேசுவாங்க, அதோட நீ நல்ல வருவாடா தம்பி என்று கூறுவார்கள். அதே போல சந்தானம் கொடுத்த பரிசைத்தான் என்னுடைய காரில் நான் வைத்திருக்கின்றேன் என்று பிரபல நடிகர்களுடன் இருக்கும் தன்னுடைய நட்பினை பற்றி கூறியிருந்தார் குக் வித் கோமாளி புகழ்.

Advertisement