குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறிய காரணம் குறித்து கேள்வி எழுப்பியதால் கடுப்பாகி இருக்கிறார் புகழ். விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற காரணமே கோமாளிகள் தான். அதிலும் இந்த நிகழ்ச்சியில் புகழ், குரேஷி, பாலாவிற்கு அடுத்தபடியாக மணிமேகலை தான் காமெடியில் கலக்கி வந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகி இருப்பதாக அறிவித்து இருந்தார்.
வெளியேறிய மணிமேகலை :
இதுகுறித்து அறிவித்து இருந்த அவர் ‘ ‘இன்று குக் வித் கோமாளியில் என்னுடைய கடைசி எபிசோடு. ‘நான் வரமாட்டேன்’ என நானே வருவேன் கெட்டப்பில் அறிவிக்கிறேன்.2019ல் தொடங்கிய முதல் சீசனில் இருந்து நீங்கள் எனக்கு குக் வித் கோமாளிக்காக அதிக அளவு அன்பை பொழிந்துகொண்டிருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் நான் எப்போதும் பெஸ்ட் ஆக இருக்க அதிக அளவு efforts போட்டிருக்கிறேன்.
#Pugazh About #Manimegalai pic.twitter.com/wNPSXconXA
— chettyrajubhai (@chettyrajubhai) March 3, 2023
குக் வித் கோமாளியின் உங்களை entertain செய்ய கொஞ்சம் justice செய்திருக்கிறேன். உங்களிடம் இருந்து எதிர்பார்க்காத அளவுக்கு அன்பு கிடைத்தது, அது நான் செய்யும் மற்ற விஷயங்களிலும் இருக்கும் என நம்புகிறேன். என்று பதிவிட்டுள்ளார். மணிமேகலையின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் ஏற்கனவே பாலா இல்லை என்பதால் இந்த சீசன் கொஞ்சம் போராக சென்று கொண்டிருக்கிறது. தற்போது நீங்களும் சென்று விட்டால் எப்படி என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கர்ப்பமாக இருப்பதால் வெளியேறினாரா :
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற புகழிடம், மணிமேகலை கர்ப்பமாக இருப்பதால் தான் நிகழ்ச்சியில் இருந்துவெளியேறிவிட்டாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்தாலும் நான்கு சீசன்களாக தவறாமல் இடம்பெற்றது மணிமேகலை மட்டும் தான். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற புகழிடம், மணிமேகலை கர்ப்பமாக இருப்பதால் தான் குக்கு வித் கோமாளியில் இருந்துவிலகிவிட்டாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
புகழ் விளக்கம் :
இதற்கு பதில் அளித்த புகழ் ‘அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் அவர்கள் கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறீர்கள். அதைப்பற்றி எனக்கு தெரியாது. தயவு செய்து இது போன்ற வதந்திகளை யாரும் கிளப்பாதீர்கள். அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா இல்லையா என்பது கடவுளுக்கு தான் தெரியும். ஒருவேளை அவர் இருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், அதை வைத்து நீங்கள் வதந்தியை பரப்பாதீர்கள். அவர்கள் ஏதாவது தனிப்பட்ட வேலையாக சென்றிருக்கலாம்’ என்று கூறியுள்ளார்.