நான் கார்லா வாங்கி இருக்கேன்னா அவர் தான் காரணம், ஆனா, மாமா இல்லையே- மேடையில் கலங்கிய புகழ்.

0
1023
Pugazh
- Advertisement -

மேடை கலைஞரும் காமெடி நடிகருமான வடிவேலு பாலாஜி இறந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது கலக்கப்போவது யாரு கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் காமெடியனாக தோன்றி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் வடிவேலு பாலாஜி. . வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இவரது தனித்துவமே வடிவேலு ஸ்லாங்கும் அவரது பாடி லாங்குவேஜும் தான். வடிவேலு திரைப்படத்தில் பேசிய வசனங்கள் தான். வடிவேலுவை போல மிமிக்ரி செய்யும் மேடை கலைஞர்கள் ‘வேணா… வலிக்கிது, அழுதுருவேன் என்ற ஒரே வசனத்தை பேசி போர் அடிக்க வைத்த நிலையில் வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேலுவின் அத்தனை மாடுலேஷனிலும் நடித்து அசத்தி இருந்தார்.

இதையும் பாருங்க : நான் பிக் பாஸ் 5க்கு போனும்னா இந்த ரெண்டு பேர் என் கூட அனுப்புங்க – Kpy ராமர். (இவங்க போனா வேற லெவல்ல இருக்குமே)

- Advertisement -

இவரது பிரிவால் விஜய் டிவி விஜய் டிவி பிரபலங்கள் பலரையும் பாதித்தது. வடிவேல் பாலாஜியின் உடல் அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. மேலும், வடிவேலு பாலாஜியின் இறுதி அஞ்சலியில் விஜய் டிவி பிரபலங்களான தாடி பாலாஜி, ராமர், Kpy பாலா புகழ் என்று பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதில் Kpy புகழ், பாலாஜியின் உடலை பார்த்து. எந்திரி மாமா வா போலாம். நீ தான எனக்கு அம்மா அப்பாவா இருந்த இனி எனக்கு யார் இருக்கா மாமா என்று கதறி அழுது இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பிரபல தனியார் யூடுயூப் நிறுவனம் சார்பாக ‘தொலைக்காட்சியில் அதிகம் கொண்டாடபட்ட காமெடியன்’ என்ற விருது வடிவேலு பாலாஜிக்கு வழங்கப்பட்டது. இந்த விருது அறிவிக்கப்பட்ட பின்னர் கண்ணீருடன் பேசிய புகழ், நான் இந்த அளவிற்கு வந்திருக்கிறேன் என்றால் அண்ணன் வடிவேலு பாலாஜி தான் காரணம். நான் இன்றைக்கு ஓரளவிற்கு வளர்ந்து இருக்கிறேன். கார் எல்லாம் வாங்கி இருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் பார்க்க என்னுடைய மாமா இல்லை என்று கூறியுள்ளார் புகழ்.

-விளம்பரம்-
Advertisement